ஐபிஎல் 2022 கப் குஜராத்துக்கு தான் – அடித்துக்கூறும் 2 புள்ளிவிவரம் ! ராஜஸ்தான் சாதிக்குமா? – விவரம் இதோ

Hardik Pandya GT Vs RR
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல பரபரப்பான தருணங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. இம்முறை 10 அணிகள் விளையாடுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முன்பை விட மிகவும் பரபரப்பாக மும்பை நகரில் நடைபெற்றது. ஏனெனில் 10 அணிகள் விளையாடியதால் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற இருமடங்கு போட்டி நிலவிய நிலையில் மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான அணிகள் உட்பட 6 அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

Jost Buttler 109

- Advertisement -

அதேசமயம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத், லக்னோ ஆகிய அணிகளுடன் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளும் தேவையான வெற்றிகளுடன் 4 இடங்களைப் பிடித்தன. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நடந்த குவாலிபயர் 1 போட்டியில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் நேரடியாக பைனலுக்கு சென்றது. அதேபோல் லக்னோவை எலிமினேட்டர் போட்டியில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக பங்கேற்ற குவாலிபயர் 2 போட்டியில் தோல்வியடைந்து வீட்டுக்கு கிளம்பியது.

குஜராத் V ராஜஸ்தான்:
அதை தொடர்ந்து மே 29-ஆம் தேதியான இன்று நடைபெறும் ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அஹமதாபாத் நகரில் நடைபெறும் இப்போட்டிக்கு முன்பாக ஏஆர் ரகுமான், ரன்பீர் கபூர் ஆகியோர் பங்குபெறும் நிறைவு விழா நடை பெறுவதால் இந்த போட்டி 8 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியில் கடைசி முயற்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல இரு அணிகளும் முழுத் திறமையை வெளிப்படுத்தி முழுமூச்சுடன் போராட தயாராகியுள்ளன.

GTvsRR

இதில் கேப்டன்ஷிப் அனுபவம் கொஞ்சம் கூட இல்லாத போதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் சுப்மன் கில், ரித்திமான் சஹா, டேவிட் மில்லர், ராகுல் திவாடியா – ரசித் கான் ஆகியோர் பேட்டிங்கில் வழு சேர்க்கின்றனர். ரஷீத் கான், முகமது சமி, இளம் தமிழக வீரர் சாய் கிஷோர் என பந்துவீச்சும் வலுவாக காட்சியளிக்கிறது. எனவே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தியது போல இந்த இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைக்க குஜராத் தயாராகியுள்ளது.

- Advertisement -

அதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையில் ஆரம்பம் முதலே தடுமாறாமல் விளையாடி வரும் ராஜஸ்தானுக்கு பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் நங்கூரமாகவும் ஆணிவேராகவும் நின்று காப்பாற்றி வருகிறார். அவருடன் ஜெய்ஸ்வால், படிக்கள் போன்ற இளம் வீரர்கள் துணையாக இருக்க பினிஷிங் செய்ய சிம்ரோன் ஹெட்மையர் காத்திருக்கிறார். மேலும் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்னா, ஓபேத் மெக்காய் இரட்டை குழல் துப்பாக்கி சுழல் பந்துவீச்சு ஜோடி அஷ்வின் – சஹால் உள்ளதால் அந்த அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது.

GT

கப் குஜராத்க்கே:
எனவே 2008இல் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி அதன்பின் 13 வருடங்கள் கழித்து பைனலுக்கு தகுதி பெற்றுள்ள இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று ஜாம்பவான் வார்னேவுக்கு நினைவு அஞ்சலி பரிசளிக்க போராட உள்ளது. இருப்பினும் இந்த பைனலில் குஜராத் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று 2 புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

1. அதாவது 2018 சீசனில் 2 லீக், 1 ப்ளே ஆப், 1 பைனல் என ஹைதராபாத்துக்கு எதிராக பங்கேற்ற 4 போட்டிகளிலும் வென்ற சென்னை இறுதிப் போட்டியிலும் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. 2019இல் அதேபோல் சென்னைக்கு எதிராக 2 லீக் மற்றும் 1 ப்ளே ஆப், 1 ஃபைனல் என பங்கேற்ற 4 போட்டிகளிலும் 4 வெற்றிகளைப் பெற்ற மும்பை கோப்பையை வென்றது. 2020இல் டெல்லிக்கு எதிராக 2 லீக் மற்றும் 1 ப்ளே ஆப், 1 ஃபைனல் என பங்கேற்ற 4 போட்டிகளிலும் வென்ற மும்பை மீண்டும் கோப்பையை வென்றது. 2021இல் 2லீக் , 1 பைனல் என கொல்கத்தாவுக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகளிலும் வென்ற சென்னை கோப்பையை வென்றது.

Jos Buttler vs RCB

2. அந்த வரிசையில் இந்த வருடம் 1 லீக், 1 பிளே ஆஃப் என இதுவரை ராஜஸ்தானுக்கு எதிராக பங்கேற்ற 2 போட்டிகளிலும் குஜராத் வென்றுள்ளது. அப்படியானால் 2018 முதலான ஐபிஎல் வரலாற்றைப் பார்க்கும் போது இன்றைய இறுதிப் போட்டியிலும் குஜராத் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. அதேபோல் இந்த வருடம் ராஜஸ்தானுக்காக ரன் மழை பொழிந்து 824* ரன்களைக் குவித்துள்ள ஜோஸ் பட்லர் ஆரஞ்சு தொப்பியை வென்றதுடன் இந்த வருட ஐபிஎல் தொடரின் தொடர் நாயகன் விருதை வாங்கப்போகும் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் வரலாற்றில் இதற்கு முன்பு இதுபோல ஒரே சீசனில் ஆரஞ்சு தொப்பியையும் தொடர்நாயகன் விருதையும் வென்ற வீரர்களின் அணிகள் இறுதிப் போட்டியில் பரிதாபமாக தோற்றன.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

4. அதாவது 2010இல் ஆரஞ்சு தொப்பியும் தொடர்நாயகன் விருதை சச்சின் டெண்டுல்கர் வென்றாலும் இறுதிப்போட்டியில் சென்னையிடம் மும்பை தோற்றது. 2011இல் கிறிஸ் கெயில் ஆரஞ்சு மற்றும் தொடர் நாயகன் விருதை வென்ற போதிலும் இறுதிப்போட்டியில் சென்னையிடம் பெங்களூரு தோற்றது. 2016இல் 973 ரன்கள் குவித்த விராட் கோலி முழுமூச்சுடன் போராடி ஆரஞ்சு தொப்பியை வென்ற போதிலும் இறுதி போட்டியில் ஹைதராபாத்திடம் பெங்களூரு தோற்றது.

இதையும் படிங்க : IPL 2022 : இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை ஜெயிக்கப்போவது இவங்கதான் – சுரேஷ் ரெய்னா கணிப்பு

அந்த வரிசையில் தற்போது பட்லர் நிற்கிறார் என்ற நிலையில் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை உடைத்து ராஜஸ்தான் சாதித்து கோப்பையை வென்று காட்டுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement