RR vs GT : வெற்றியை தலைகீழாக மாற்றிய சஞ்சு சாம்சனின் தவறு – ராஜஸ்தானை ஆல் ஏரியாவிலும் குஜராத் ஊதி தள்ளியது எப்படி

RR vs GT Hardik pandya Buttler
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 5ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 48வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஜோஸ் பட்லர் 2 பவுண்டரியுடன் பாண்டியா வேகத்தில் 8 (6) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் கடந்த போட்டியில் சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி 1 சிக்சருடன் அதிரடியை துவக்க முயற்சித்த போது சஞ்சு சாம்சன் தேவையின்றி அழைத்து 14 (11) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.

அது மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியதை போல ரன் அவுட் செய்ததால் பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (20) ரன்களில் ஆட்டமிழந்தார். அதை பயன்படுத்திய குஜராத் அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரியான் பராக் 4, தேவ்தூத் படிக்கள் 12, சிம்ரோன் ஹெட்மயர் 7, துருவ் ஜுரேல் 9 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கதையை முடித்தது.

- Advertisement -

அதனால் 100 ரன்களை தாண்டுமா என்று கருதப்பட்ட ராஜஸ்தான் கடைசி நேரத்தில் ட்ரெண்ட் போல்ட் 15 (11) ரன்கள் எடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்றிய போதிலும் 17.5 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 3 விக்கெட்டுகளும் நூர் அகமது 2 விக்கெட்டுகளும் முகமது ஷமி, கேப்டன் பாண்டியா, ஜோஸ் லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 119 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு பவர் பிளே ஓவர்களில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சுப்மன் கில் மற்றொரு தொடக்க வீரர் ரிதிமான் சஹாவுடன் இணைந்து நங்கூரமாக விளையாடி 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த போதிலும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 6 பவுண்டரியுடன் 36 (35) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 11வது ஓவரில் ஆடம் ஜாம்பாவை 6, 4, 6, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளாக பறக்க விட்டு 39* (15) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அவருடன் சஹா 5 பவுண்டரியுடன் 41* (34) ரன்கள் எடுத்ததால் 13.5 ஓவரிலேயே 119/1 ரன்கள் எடுத்த குஜராத் 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. பேட்டிங்கில் கோட்டை விட்ட ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் அந்த 1 விக்கெட்டை எடுத்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அதிரடியான பேட்ஸ்மேன்களை கொண்டிருந்தும் பட்லர் ஏமாற்றிய நிலையில் ஜெய்ஸ்வாலை பவர் ப்ளே ஓவரில் சஞ்சு சாம்சன் ரன் அவுட்டாக்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

ஏனெனில் அதை பயன்படுத்திய குஜராத் மிடில் ஓவர்களில் அபாரமாக பந்து வீசி வெறும் 118 ரன்களுக்கு கட்டுப்படுத்தி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதே போல கடந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக வெறும் 131 ரன்களை துரத்தும் போது மெதுவாக விளையாடியதால் தோல்வி கிடைத்ததை மனதில் வைத்த அந்த அணி இந்த போட்டியில் அதற்கு இடம் கொடுக்காமல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி தங்களது 7வது வெற்றியை பதிவு செய்து 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக பிடித்துள்ளது.

இதையும் படிங்க:SRH vs KKR : அவங்க நம்மல தோக்கடிக்கல. நாம தான் வம்படியா போயி வெற்றியை அவங்ககிட்ட குடுத்திருக்கோம் – பிரைன் லாரா விளாசல்

குறிப்பாக 37 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்ட குஜராத் ஐபிஎல் தொடரில் பந்துகள் அடிப்படையில் தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதிலும் குறிப்பாக கடந்த முறை மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்த பாண்டியா இம்முறை சரவெடியாக விளையாடி பெரிய வெற்றியை உறுதியாக்கி தன்னுடைய அணியின் ரன் ரேட்டை அதிகப்படுத்தினார். மறுபுறம் மோசமாக தோற்ற ராஜஸ்தான் 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்து

Advertisement