ஆஸ்திரேலிய அணி செய்த இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம் – கிரேக் சேப்பல் குற்றசாட்டு

Greg-Chappell
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் மார்ச் மாதம் 1-ஆம் தேதியும், மார்ச் மாதம் 9-ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் இருந்து பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருப்பதும் அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் நாடு திரும்பிருப்பதும் அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி செய்த சிறிய தவறுதான் தோல்விக்கு காரணம் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவானும், பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Pat-Cummins

எனக்கு ஒரு விடயம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒருமுறை மைக் டைசன் பேசுகையில் வாயில் குத்து விழும் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும் என்று கூறியிருந்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தபோது எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியினர் முதல் பந்தினை சந்திக்கும் முன்னரே வாயில் குத்து விழுந்து விட்டதாக நினைத்துக் கொண்டனர். திட்டமிடுதல் என்பது எப்போதுமே முக்கியமான ஒன்று. இந்தியாவை இங்கு வீழ்த்த வேண்டும் என்பதற்காக கூடுதல் சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்தது தவறு. நமது அணியின் பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

இதையும் படிங்க : இந்தியாவ ஒன்னும் பண்ண முடியாது, பேசமா வீட்லயே இருங்க – கேப்டன் பட் கமின்ஸ்க்கு முன்னாள் ஆஸி வீரர் கோரிக்கை

எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து பேட்ஸ்மேன்களும் கை கொடுத்திருந்தால் நிச்சயம் இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக அழுத்தத்தை அளித்திருக்க முடியும். ஆனால் நாம் திட்டத்திலேயே தவறினை செய்து விட்டோம். அதன் காரணமாகவே ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்க நேர்ந்தது என கிரேக் சேப்பில் குற்றச்சாட்டினை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement