
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்றார்கள். அதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் படுதோல்வியை சந்திக்கும் என்று மைக்கேல் வாகன் உள்ளிட்ட முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தார்கள்.
ஆனால் முதல் போட்டியிலேயே 5 சதங்கள் அடித்து மிரட்டிய இந்தியா 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்து வெளிநாட்டில் தங்களுடைய பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. 3வது போட்டியில் போராடி தோற்ற இந்தியா 4வது போட்டியில் சந்திக்க வேண்டிய இன்னிங்ஸ் தோல்வியை போராடி தவிர்த்தது. 5வது போட்டியில் கடுமையாக போராடியும் இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி நாளில் வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று நினைக்கப்பட்டது.
ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றி 1972 ஆஸ்திரேலியா போல இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் பொற்கால சகாப்தத்தை துவங்கியுள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கணித்துள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் விளக்கியது பின்வருமாறு.
“2 – 1 என்ற கணக்கில் பின்தங்கியும் முரண்பாடுகளுக்கு எதிராக இங்கிலாந்தின் மிகச்சிறப்பான ஒரு மைதானத்தில் 2 – 2 என தொடரை சமன் செய்வது வெறும் சதுர ஸ்கோர்கள் அல்ல. இது ஒரு நோக்கத்தின் பிரகடனம். இதே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒரு தலைமுறைக்கான மாற்றத்திற்கான நெருப்பை பற்ற வைத்தது”
“அது அடுத்த தசாப்தத்தை வடிவமைக்க வித்திட்டது. அந்த ஒற்றுமையை இங்கே பொருத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 1972இல் தலைமுறையில் மாற்றம் பெற்றுக் கொண்டிருந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு சென்றது. பில் லாரி விடை பெற்றார். கிரகாம் மெக்கன்சி, இயன் ரெட்பாத் போன்ற நட்சத்திரங்கள் ஓய்வு பெற்றார்கள்”
“அப்போது என் சகோதரர் (இயன் சேப்பல்) தலைமையில் அடையாளம் தெரியாத இளம் அணி இங்கிலாந்து சென்றது. நாங்களும் அத்தொடரின் கடைசி போட்டியை வென்று தொடரை சமன் செய்தோம். டென்னிஸ் லில்லி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சின் தலைவராக தன்னை அறிவித்தார். அத்தொடரில் நாங்கள் ஆக்ரோசம், ஒற்றுமை, நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொனியை நிறுவினோம்”
இதையும் படிங்க: கேப்டனாக கில் 5 மேட்ச்சையும் ட்ரா பண்ண பிளேயிங் லெவனை எடுத்துட்டு.. அசத்த இதான் காரணம்.. அஜய் ஜடேஜா
“அது 1970களின் பொற்காலத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இந்தியாவும் அதே போன்ற ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது. ரோஹித், விராட், அஸ்வின் ஆகியோர் இல்லை. அவர்களுக்கு பதிலாக வந்தவர்கள், அவர்களுடைய இடத்தை மட்டும் நிரப்பவில்லை, புதிதாக ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். 1972 ஓவல் போட்டியில் ஆஸ்திரேலியாவை போல இந்தியாவும் மணலால் சமமான கோட்டை வரைந்துள்ளது. அவர்கள் கிரிக்கெட்டின் உலகத்திற்கு நாங்கள் இங்கே ஏதோ ஒன்றை உருவாக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.