இந்த பாக் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் – திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பயிற்சியாளர்

Grant-Flower
- Advertisement -

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவானான கிராண்ட் பிளவர் அந்த அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 221 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒரு அணியாக ஜிம்பாப்வே எப்போதும் மோசமாக விளையாடினாலும், அந்த அணியில் தனது அபாரமான பேட்டிங் திறன் மூலம் தனியாக உலகிற்கு வெளியில் தெரிந்தவர் கிராண்ட் பிளவர்.

Grant Flower 2

- Advertisement -

தனது அட்டகாசமான பேட்டிங் மூலம் அசத்திய இவர் அந்த அணிக்காக சுமார் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாடினார். இவரது சகோதரர் ஆன்டி பிளவரும் ஓர் அட்டகாசமான பேட்ஸ்மேன் தான். கிட்டத்தட்ட ஆஸ்திரேலிய அணிக்கு வாக் சகோதரர்கள் எப்படியோ அதேபோன்று ஜிம்பாப்வே அணிக்கு பிளவர் ஜோடியை கூறலாம்.

ஓய்வுக்குப் பிறகும் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் கிராண்ட் பிளவர் பல அணிகளுக்கு பேட்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக தான் இருந்த அனுபவம் குறித்து அவர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Grant Flower 3

2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் அவரது பயிற்சி காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானை சமாளிப்பது மிகக் கடினம். ஆஸ்திரேலியாவிற்கு எதிரே நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது.

- Advertisement -

அந்த போட்டியின் இடைவெளியில் நான் அவருக்கு சில பேட்டிங் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தேன் அப்போது ஆத்திரமடைந்த அவர் என் கழுத்தில் கத்தியை எடுத்து வைத்துவிட்டார். அப்போது பதறிய மற்றவர்கள் யூனிஸ் கானை சமாதானப் படுத்தினார்கள் என்று அந்த அனுபவத்தை கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து சுவாரசியமாகவே இருந்தது.

Grant Flower 1

அது ஒரு கடினமான பயணம் தான் இப்பொழுதும் கிரிக்கெட் நுணுக்கங்களை நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். இன்றளவும் இன்னும் கிரிக்கெட் நிறைய இருக்கிறது ஆனால் இப்போதும் நான் இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் தற்போது கிராண்ட் பிளவர் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement