நியூசிலாந்து அணியின் பிரபல ஆல்ரவுண்டர் ஓய்வு அறிவிப்பு.! ரசிகர்கள் அதிர்ச்சி.!

elli-3

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிராண்ட் இலியாட் சர்வதேச போட்டிகள் அனைத்திலும் இருந்து  இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறப்போவதாக தனது முடிவினை அறிவித்துள்ளார். தற்போது 39 வயதாகும் இவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அங்கிருந்து நியூசிலாந்தில் குடி ஏறிய இவர், நியூசிலாந்து மாகாண அணியில் இடம்பிடித்து படிப்படியாக முன்னேறி தேசிய அணியிலும் இடம்பிடித்து ஆடினார்.

elli 1

இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து இன்றுவரை 83 போட்டிகளில் 1976 ரன்களை குவித்துள்ளார். மேலும் 5 டெஸ்ட் போட்டி மற்றும் 17 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது டி20 லீக் போட்டிகளில் ஆடிவரும் அவர் இந்த ஆண்டு இறுதியில் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக “சிட்னி கிரிக்கெட் கிரவுண்டில்” இவர் அடித்த சதம் தான்,
நியூசிலாந்து வீரர் அந்த கிரவுண்டில் அடித்த முதல் சதம். அந்த இன்னிங்ஸ் அந்த கிரவுண்டின் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ் ஆக இன்றுவரை பார்க்கப்படுகிறது. ஆரம்ப காலங்களில் சுமாராக விளையாடி வந்த எலியாட் 2015 உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டார்.

elliot

டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடும் இவர். சமீப காலமாக தான் அதாவது ஓய்வு பெறப்போகும் இப்போது ஒரு சில ஆண்டுகளாக தான் வேறு மாதிரியான ஆட்டத்தினை அதிரடியாக ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.