இங்கிலாந்து அணியின் தோனி இவர்தான். அவரால் இங்கிலாந்து அணி பல வெற்றிகளை பெறும் – ஸ்வான் ஓபன்டாக்

Swann
- Advertisement -

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி முதலில் டெஸ்ட் தொடரை விளையாடி முடித்துள்ளது , மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்கிற கணக்கில் கைப்பற்ற தவறியது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க இருக்கிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி டி20 தொடரை நிச்சயமாக கைப்பற்ற போராடும் என்பதில் சந்தேகமில்லை.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் இத்தொடர் குறித்து சில விஷயங்களை ஆன்லைன் மூலம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து அணி சமீப காலங்களாக மோர்கன் தலைமையின் கீழ் பல வெற்றிகளை பெற்று இருக்கிறது.ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக டி20 போட்டிகளில் மோர்கன் தலைமையில் கீழ் 54 போட்டியில் இங்கிலாந்து அணி ஆடி உள்ளது.

அதில் 34 போட்டியில் வெற்றி அடைந்துள்ளது. கேப்டனாக மோர்கன் பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து வந்துள்ளார். இதுவரை 93 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள மோர்கன் இரண்டாயிரத்து 278 ரன்கள் எடுத்துள்ளார். அவரேஜ் விகிதம் 30.37 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் விகிதம் 138.99 ஆகும். மேலும் எப்படி இந்தியாவுக்கு மகேந்திரசிங் தோனி பல வெற்றிகளை பெற்று தந்தாரோ , அதேபோல் மோர்கனும் இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளை பெற்று தருவார்.

Morgan

இந்த தொடரை நிச்சயமாக மோர்கன் தலைமையில் இங்கிலாந்து அணி கைப்பற்றும் என்று கிரேம் ஸ்வான் கூறினார். மேலும் டேவிட் மலன் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். இதுவரை 19 இன்னிங்ஸ்களில் ஆடி 855 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 53.44 ஆகும் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 149. 48 ஆகும். 9 அரை சதமும் ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலன் எப்போதும் நன்றாக ஆடி வரும் வீரராவார். அவரது பேட்டிங் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். நிச்சயம் இந்தியாவுக்கு எதிராக நன்றாக செயல்படுவார், இந்திய அணிக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஆடுவார் என்று கிரேம் ஸ்வான் கூறி முடித்தார்.

Advertisement