டிராவிட் பேட்டிங் செய்யும்போது பந்துவீசும் நாமெல்லாம் அவருக்கு எதிரே 11 வயது பொடியன் தான் – புலம்பிய இங்கிலாந்து பவுலர்

Dravid
- Advertisement -

கிரிக்கெட் உலகில் அதிக பந்துகளை சந்தித்த மிகப்பெரிய வீரர் என்றும் என்னும் பெயரைப் பெற்றவர் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட். டெஸ்ட் போட்டிகளில் இவரது பேட்டிங்கை ரசிக்காத ரசிகர்களும், வெறுக்காத பந்துவீச்சாளர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவு பந்துவீச்சாளரின் பொறுமையை சோதித்து விளையாடுவதில் டிராவிட் கில்லாடி. மேலும் எவ்வளவு நேரம் இவர் விளையாடினாலும் இவரை வீழ்த்துவது என்பது மிகவும் கடினம். டிராவிடின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் பவுலர்கள் நாள் கணக்கில் புலம்பியதையும் நாம் கண்டுள்ளோம்.

Dravid 1

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என இருவகை கிரிக்கெட்டிலும் பல ஆண்டுகளாக ஆணித்தரமாக நின்று கிட்டத்தட்ட 20,000 ரன்களுக்கு மேல் விளாசியுள்ளார். தற்போது வரை ஒரு மிகச் சிறந்த ஆட்டக்காரராகப் பார்க்கப்படும் அவருக்கு பந்துவீசி பல ஜாம்பவான்வீச்சாளர்கள் ஓய்ந்துபோய் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அணியின் தூணாக நிற்கும் இவருக்கு “இந்திய அணியின் சுவர்” என்ற செல்லப்பெயரும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கிரேம் ஸ்வான் ராகுல் டிராவிட்டை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் கூறியதாவது : ராகுல் டிராவிட் என்னை பொறுத்தவரையில் மிகப் பெரிய வீரர். அவர் இங்கிலாந்து வந்து கவுண்டி அணிக்காக ஆடியபோது அவருக்கு பந்துவீசி உள்ளேன்.

Dravid 2

அவர் ஆட்டத்தை நம்பவே முடியாது. அவர் தனது விக்கெட்டை இழக்கவே மாட்டார். என் வாழ்வில் அவரைப் போன்று மிகச் சிறந்த வீரரை பார்த்ததில்லை. உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் அவருக்கு நான் பந்துவீசும் போது ஏதோ என்னை 11 வயது சின்ன பையன் போல் நடத்துவார். அந்த அளவிற்கு எனது பந்தை மிக அருமையாக ஆடுவார்.

என்னையும் அவர் அவரே நடத்தினார். அவருக்கு எதிராக பந்துவீசுவது என்பது மிகவும் கடினமான ஒன்று என்றும் அவர் கூறியது குறிப்பிடதக்கது. இதுவரை கிரேம் ஸ்வான் 66 டெஸ்ட் போட்டிகள் 79 ஒருநாள் போட்டிகளில் 39 டி20 போட்டிகளில் ஆடி 410 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement