எழுதி வெச்சுக்கோங்க 2007 ரிட்டன்ஸ், பைனலில் இந்தியா – பாக் மோதும், ரசிகர்களுடன் முன்னாள் இங்கி வீரர் கணிப்பு (காரணம் இதோ)

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் முக்கியமான சூப்பர் 12 சுற்று யாருமே எதிர்பாராத வகையில் நிறைவு பெற்றுள்ளது. ஏனெனில் கோப்பையை தக்க வைக்கும் அணியாக கருதப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறிய நிலையில் குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. அந்த நிலையில் குரூப் 2 பிரிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியாவையே தோற்கடித்து 2வது இடத்தில் இருந்த வலுவான தென்னாபிரிக்கா எளிதாக தகுதி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காலம் காலமாக உலகக் கோப்பைகளில் முக்கிய தருணங்களில் சொதப்பும் தென் ஆப்பிரிக்கா நவம்பர் 6ஆம் தேதியன்று தன்னுடைய கடைசி போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்திடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று மீண்டும் தன்னைச் சோக்கர் என்பதை நிரூபித்தது. அதனால் கையில் வைத்திருந்த வாய்ப்பை தென்னாப்பிரிக்கா கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தாலும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கிண்டல்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளான அந்த அணியின் கதை முடிந்ததாக கருதப்பட்டது.

- Advertisement -

இந்தியா – பாகிஸ்தான்:
ஆனாலும் மனம் தளராமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற அந்த அணி தென்னாபிரிக்கா வெளியேறியதால் தன்னுடைய கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அப்படி கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்டால் பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக தென்னாப்பிரிக்கா வெளியேறியதால் ஜிம்பாப்வேபை தன்னுடைய கடைசி கிரிக்கெட் போட்டியில் எதிர்கொள்வதற்கு முன்பாகவே இந்தியாவும் 3வது அணியாக தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தானும் நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் 2வது செமி பைனலில் இங்கிலாந்தை இந்தியாவும் எதிர்கொள்கிறது.

1. ஆனால் இந்த அரையிறுதி சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் வென்று இறுதிப் போட்டியில் மீண்டும் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தும் என்று இருநாட்டு ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். அதிலும் கடந்த 2007ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய அதே மேஜிக் மீண்டும் இம்முறை நிகழப் போவதாக ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

2. ஏனெனில் வரலாற்றில் 2007க்குப்பின் நடைபெற்ற 2009, 2010, 2012, 2014, 2016, 2021 ஆகிய டி20 உலக கோப்பைகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்தார்போல் இப்படி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றதில்லை என்பது அதற்கு முதற்காரணமாக ரசிகர்கள் கூறுகிறார்கள். எனவே 15 வருடங்கள் கழித்து இவ்விரு அணிகளும் மீண்டும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் மீண்டும் ஃபைனலில் மோதும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

3. மேலும் தொடரை நடத்திய நாடு அரையிறுதிக்கு (2007இல் தென் ஆப்பிரிக்கா இப்போது ஆஸ்திரேலியா) தகுதி பெறாமல் வெளியேறியது. அத்துடன் 2007 உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இந்தியா விளையாடியது. இப்போதும் கடைசி லீக் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேவுடன் விளையாடியது.

- Advertisement -

4. 2007இல் இதே போலவே நியூசிலாந்தை பாகிஸ்தான் தன்னுடைய அரையிறுதி போட்டியில் எதிர்கொண்டது. அத்துடன் 2007இல் அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஒரு அணியை ஜிம்பாப்வே தோற்கடித்திருந்தது (2007இல் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த ஜிம்பாப்வே இம்முறை பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது).

5. மேலும் 2007இல் 50 ஓவர் உலக சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை தன்னுடைய அரையிறுதி போட்டியில் எதிர்கொண்ட இந்தியா இம்முறை 50 ஓவர் சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

6. இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஸ்வான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கணித்து பேசியுள்ளார். மொத்தத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இதே உலக கோப்பையில் மீண்டும் ஒருமுறை மோதுவதை பார்ப்பதற்கு இருநாட்டுச் சேர்ந்த ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது என்றே கூறலாம்.

Advertisement