75வது இந்திய சுதந்திர தின ஸ்பெஷல் கிரிக்கெட் போட்டிக்காக நடக்கும் ஏற்பாடுகள் – வெளியான சூப்பர் தகவல்

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இன்று இந்தியாவும் உலகின் நம்பர்-1 கிரிக்கெட் அணியாக உயர்ந்து நிற்கிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வெள்ளையர்களால் இந்தியாவில் காலூன்ற துவங்கிய கிரிக்கெட் 1932 முதல் அதிகார பூர்வமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் கத்துக்குட்டியாக வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளிடம் சரமாரியான அடி வாங்கிய இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வெற்றிநடை போடத் துவங்கியது.

worldcup

- Advertisement -

நாடு சுதந்திரமடைந்த 1947க்கு பின்பு நல்ல வளர்ச்சியை காணத் துவங்கிய இந்திய கிரிக்கெட்டின் உண்மையான வளர்ச்சி கடந்த 1983இல் இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக கோப்பையை வெறித்தனமான வெஸ்ட் இண்டீசை சாய்த்து கபில்தேவ் தலைமையிலான அணி உலக கோப்பையை வென்றபோது துவங்கியது. அதுவரை கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத பெரும்பாலான இந்திய மக்களை திரும்பி பார்க்க வைத்த அந்த உலகக்கோப்பை வெற்றி அதன்பின் கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் அளவுக்கு முற்றிலுமாக மாற்றியது.

சுதந்திரதின ஸ்பெஷல்:
சொல்லப்போனால் தேசிய விளையாட்டாக கருதப்படும் ஹாக்கியையும் நாளடைவில் பின் தள்ளிய கிரிக்கெட் இந்தியாவில் இன்று நம்பர் ஒன் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. கபில் தேவ், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களால் மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் 2007, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்தியா உலக கோப்பையை வென்ற காரணத்தால் ஒரு மதமாக பார்க்கும் அளவுக்கு உணர்வுடன் கலந்துள்ளது.

fans 1

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாட தயாராகி வருகிறது. “அஷாதி கா மஹோட்ஸவ்” என்ற பெயரில் அதை கொண்டாட முடிவு செய்துள்ள இந்திய அரசு அதை பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விளையாட்டு ரீதியாக கொண்டாடும் வகையில் ஸ்பெஷலான ஒரு கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அரசு இப்போதே ஏற்பாடு செய்யத் துவங்கியுள்ளது.

- Advertisement -

வேர்ல்ட் லெவன்:
அதாவது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இந்திய அணியுடன் உலகின் மிகச்சிறந்த 11 பேர் கொண்ட உலக லெவன் அணி மோதும் சிறப்பு போட்டிக்கு ஏற்பாடு செய்யுமாறு பிசிசிஐக்கு இந்திய கலாச்சாரம் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதை உறுதி செய்துள்ள பிசிசிஐ அதற்கான ஏற்பாடுகளை செய்யும் வேலைகளை துவக்கியுள்ளது. இந்தத் திட்டப்படி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று இந்தியா மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் ஏற்கனவே சர்வதேச போட்டிகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்திய அரசு கேட்கும் ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீசில் கரிபியன் பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் நடைபெற உள்ளது.

IND Team

அதனால் உலகின் சிறந்த 11 வீரர்களை இப்போட்டிக்காக தேர்வு செய்வதில் மிகப்பெரிய சவால் நிலவுவதாக தெரிவிக்கும் பிசிசிஐ இந்திய அரசின் இந்த கோரிக்கையை சிரம் மேற்கொண்டு முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளது. இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசியது பின்வருமாறு. “ஆகஸ்ட் 22-ஆம் தேதியன்று இந்தியா மற்றும் உலக லெவன் அணிகள் மோதும் போட்டிகளை நடத்துவதற்கான கோரிக்கையை நாங்கள் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். இதில் உலக அணிகளில் விளையாடப் போகும் 13 – 14 வீரர்களை தேர்வு செய்வது சிரமமாகும்.

- Advertisement -

ஏனெனில் அவர்கள் அந்த சமயத்தில் விளையாடுவதற்கு கிடைப்பார்களா என்று தெரியாது. எனவே அதை இதர கிரிக்கெட் வாரியங்களுடன் பேசி சோதித்து பார்க்க வேண்டியுள்ளது” என்று கூறினார். இதுபோக ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே நாட்டிற்கு செல்லும் இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதில் இளம் வீரர்கள் கொண்ட 2-வது தர அணி பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் ஆசிய கோப்பை தயாவதற்காக இந்தியாவில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

IND

எனவே இந்த ஸ்பெஷல் போட்டிக்காக நட்சத்திர இந்திய வீரர்கள் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை. இருப்பினும் உலக லெவன் அணியில் விளையாடுவதற்கான வீரர்கள் கிடைப்பதில் தான் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி வரும் ஜூலை 22 – 26 ஆகிய தேதிகளில் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பிசிசிஐ கோரிக்கை வைக்க உள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : விராட் கோலி இந்த மேட்ச்ல ஆடல. 3 ஆவது இடத்துல ஆடப்போறது இவர்தான் – டாசுக்கு பிறகு ரோஹித் அறிவிப்பு

மேலும் இப்போட்டி சர்வதேச போட்டியாக நடைபெறுமா அல்லது நட்பு ரீதியான போட்டியாக நடைபெறுமா என்ற அறிவிப்பு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறும் என்றும் நம்பப்படுகிறது.

Advertisement