கோவா அரசாங்கத்திடம் இருந்து யுவ்ராஜ் சிங்கிற்கு பறந்த நோட்டீஸ். நேரில் ஆஜராக உத்தரவு – என்ன நடந்தது?

Yuvraj-Singh-Goa-House
- Advertisement -

இந்திய அணி கண்ட மகத்தான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக கடந்த 2000-ஆவது ஆண்டில் அறிமுகமாகி 2017 வரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதோடு இந்திய அணி 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வென்றபோதும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற போதும் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்த யுவராஜ் சிங் கடந்த 2019-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

YuvrajSingh

- Advertisement -

அதனை தொடர்ந்து அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விலகிய யுவராஜ் சிங் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருவதோடு மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருமானத்தை ஈட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளமான கோவாவிலும் அவருக்கு சொந்தமான ஒரு சொகுசு பங்களா உள்ளது. அங்கு நேரத்தை கழிக்க அவ்வப்போது குடும்பத்துடன் செல்லும் யுவராஜ் சிங் தற்போது அந்த பங்களாவை தற்போது விடுதியாக மாற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடயிருக்கிறார்.

இது குறித்து யுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு கருத்தில் : கோவாவில் உள்ள எனக்கு சொந்தமான காசா சிங் வீட்டில் பல்வேறு சுவாரஸ்யமான நினைவுகள் உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டும் எனில் உடனடியாக ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்.

Yuvraj Singh Goa

இந்நிலையில் யுவராஜ் சிங்கின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தற்போது கோவா அரசு அவருக்கு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பியுள்ளது. அந்த வகையில் கோவா அரசாங்கம் சார்பில் வெளியான அறிக்கையில் : கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமெனில் அரசிடம் முறையாக அதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்த பின்னரே அதற்கான அனுமதி சான்றிதழை பெற முடியும்.

- Advertisement -

அவ்வாறு அனுமதி சான்றிதழ் அரசாங்கத்திடம் இருந்து பெற்றால் மட்டுமே விடுதியாக நீங்கள் உங்களது வீட்டினை வாடகைக்கு விடலாம். ஆனால் இதையெல்லாம் செய்யாமல் நேரடியாக யுவராஜ் சிங் தனது இல்லத்தை விடுதியாக மாற்றுவது தவறு என்றும் இதற்காக அவர் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என கோவா அரசு சார்பில் நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs NZ : சீனியர் டீமை விட சூப்பரா ஆடுறாங்க. முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய வீரர்கள் – டார்கெட் எவ்வளவு?

ஒருவேளை அரசு அனுப்பும் இந்த கடிதத்திற்கு யுவராஜ் சிங் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதி அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement