சில மாதங்களுக்கு தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் பான்க்ராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட்டில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடையில் இருக்கும் ஸ்மித் மற்றும் வார்னர் கனடா நாட்டில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர்களில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தியாவில் 11 ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் போன்றே பல்வேறு நாட்டிலும் பல்வேறு உள்ளூர் லீக் போட்டிகள் நடத்து வருக்கின்றனர்.ஆஸ்திரேலியாவின் பிக் பேஸ் தொடங்கி பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் வரை பல்வேறு நாடுகளும் ஐபிஎல் தொடர் போன்றே நடத்தி வருக்கின்றனர். இந்நிலையில்
ஐபிஎல் போலவே கனடா நாட்டிலும் உள்ளுர் லீக் தொடர்களை நடத்த முடிவு செய்துள்ளது. கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் இந்த தொடர் வரும் ஜூன் 28 தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த தொடரில் 4 கனடா நாட்டு அணியும் 1 மேற்கிந்திய அணியும் பங்கு பெரும். 22 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 2 சர்வேதேச வீரர்களை தங்கள் அணியில் சேர்த்துகொள்ளலாம்.
இந்த தொடரில் சர்வதேச வீரர்களான கிரிஸ் கெயில், அன்ரே ரஸ்ஸல், ஷகிட் அஃப் ரிடி , டெரண் சமி, ஸ்டீவ் ஸ்மித், சுனில் நரேன், கிரிஸ் லேன், பிராவோ , மில்லர் ஆகியோர் பங்கு பெறுகின்றனர். மேலும் இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய 5 பயிற்சியாளர்களும் ஏலத்தில் இடம் பெற்றனர். தற்போது இந்த தொடரில் பங்குபெறும் 5 நாட்டு அணிகளின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கபட்டுள்ளன.
இந்த தொடரில் சில மாதங்களுக்கு முன்னர் பால் டெம்பரிங் விவகாரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்ட ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் மற்றும் வார்ணர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்,இதில வார்னர் வின்னிபெக் ஹாஃஸ் என்ற அணியிலும், ஸ்டீவ் ஸ்மித் டொர்னடோ நேஷனல்ஸ் அணிகளிலும் விளையாடவுள்ளனர்.