காகிஸோ ரபாடாவை தொடர்ந்து குஜராத் அணியிலிருந்து வெளியேறிய மற்றொரு நட்சத்திர வீரர் – விவரம் இதோ

GT
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பகட்ட லீக் போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் ஒவ்வொரு போட்டியுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. போட்டிக்கு போட்டி படு சுவாரஸ்யமாக நடைபெற்று வருவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :

மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது? என்பது குறித்து பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்பட்ட சில அணிகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவதும், பெரிய அளவில் பேசப்படாத சில அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவதும் என இந்த தொடரானது மேலும் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு சில அணிகளில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறும் நிகழ்வுகளையும் நம்மால் காண முடிகிறது. அந்த வகையில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியிலிருந்து ஏற்கனவே நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடா சொந்தப் பிரச்சனைகள் காரணமாக நாடு திரும்பியிருந்தார்.

அதை தொடர்ந்து தற்போது மற்றொரு வீரராக அந்த அணியில் இருந்து கிளென் பிலிப்ஸ் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகளில் அந்த அணியில் அவர் இடம்பிடித்து விளையாடவில்லை என்றாலும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் குஜராத் அணிக்காக சப்டிடியுட் வீரராக பீல்டிங் செய்திருந்தார்.

- Advertisement -

அப்போது இஷான் கிஷன் அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கையில் இடுப்பு பகுதியில் அவர் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். அதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் தற்போது காயம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள வேளையில் அவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஒரு வெற்றி போதும்.. எல்லாம் மாறிடும்.. சி.எஸ்.கே அணியின் பிளேஆப் வாய்ப்பு குறித்து பேசிய – மைக்கல் ஹஸி

இதன் காரணமாக தற்போது குஜராத் அணியிலிருந்து வெளியேறிய அவர் நாடு திரும்பியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரரை விரைவில் அந்த அணியின் நிர்வாகம் அறிவிக்கும் என்று தெரிகிறது.

Advertisement