ஒரு வெற்றி போதும்.. எல்லாம் மாறிடும்.. சி.எஸ்.கே அணியின் பிளேஆப் வாய்ப்பு குறித்து பேசிய – மைக்கல் ஹஸி

Hussey
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதல் 5 போட்டிகளின் முடிவில் நான்கு தோல்விகளை பெற்று மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது. இவ்வேளையில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

ஒரு வெற்றி எல்லாத்தையும் மாத்தும்.. நம்பிக்கை இருக்கு : மைக்கல் ஹஸி

அதனை தொடர்ந்து நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி வழிநடத்தினார். அவரது தலைமையின் கீழ் சென்னை அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியிலும் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் ஐந்தாவது தோல்வியை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலிலும் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தோல்விகளை சந்தித்து வருவதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் தோல்விகள் குறித்து பேசியுள்ள சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹஸி கூறுகையில் : நடப்பு சீசனில் நாங்கள் இன்னும் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம். ஆனாலும் ஒரு வெற்றி எங்கள் வசம் வந்துவிட்டால் நிச்சயம் அனைத்துமே மாறிவிடும்.

இதையும் படிங்க : அந்த விஷயத்துக்காக தோனி ஓய்வு பெறனும்.. சொந்த ஊரில் சிஎஸ்கே இப்படி சூனியம் வைக்கலாமா? கைஃப் கேள்வி

எங்களால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் ஆனாலும் அதை எட்டி பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதனால் அதை செய்ய முடியும் என்று நம்புவதாக மைக்கல் ஹஸி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement