உலகின் தலைசிறந்த 2 டி20 பவுலர்கள் இவர்கள்தான்.. இது என்னோட கருத்து – கிளென் மெக்ராத்

Glenn McGrath
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியனாக இந்திய அணி இந்த தொடரில் விளையாடி வருவதால் இந்திய அணியே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

தலைசிறந்த 2 டி20 பவுலர்கள் இவர்கள்தான் : கிளென் மெக்ராத்

நாளை மார்ச் 4-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. அதன்பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடர் குறித்து சில கருத்துக்களை பேசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிளென் மெக்ராத் உலகின் தலைசிறந்த இரண்டு டி20 பவுலர்கள் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்திய அணியை பொறுத்தவரை நல்ல பந்துவீச்சு தாக்குதலை கொண்டுள்ளது.

இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அர்ஷ்தீப் சின் தரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர். அவர் முதன்மை பவுலராக செயல்பட்டாலும் பும்ரா ஒரு பிக் மேட்ச் பிளேயர். எந்த நேரத்திலும் அவரால் விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தர முடியும். அந்த அளவிற்கு அவர் ஒரு அற்புதமான வீரர். போட்டியின் பெரிய தருணங்களில் விக்கெட் வீழ்த்துவது என்பது பும்ராவிற்கு இயற்கையாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிங்கு நீ கவலைப்படாதே.. உனக்காக மொத்த டீமும் இருக்கு.. வீரர்களுக்கு இடையே – கம்பீர் நம்பிக்கை பேச்சு

நான் எப்போதும் அவருடைய மிகப்பெரிய ரசிகன். என்னை பொறுத்தவரை தற்போதைய நவீன டி20 கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த இரண்டு பவுலர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஜாஷ் ஹேசல்வுட் ஆகிய இருவரையும் பார்க்கிறேன். அவர்கள் இருவருமே டெஸ்ட் மேட்ச் லென்த்தில் பந்து வீசினாலும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று கிளென் மெக்ராத் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement