ரிங்கு நீ கவலைப்படாதே.. உனக்காக மொத்த டீமும் இருக்கு.. வீரர்களுக்கு இடையே – கம்பீர் நம்பிக்கை பேச்சு

Gautam Gambhir
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் நான்கு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது. பின்னர் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் படுமோசமான தோல்வியை பெற்று சரிவை சந்தித்து இருந்தது.

இந்திய வீரர்களிடையே பேச்சு வார்த்தை நடத்திய : கவுதம் கம்பீர்

ஆனாலும் அதன் பின்னர் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது. அந்த வகையில் எதிர்வரும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கும் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதி போட்டியிலும் விளையாடும்.

- Advertisement -

தற்போது இந்த தொடரின் இறுதி கட்டமானது நெருங்கி வரும் வேளையில் இந்திய அணி குறித்து பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி இறுதி கட்டத்தை நோக்கி பயணித்திருக்கும் வேளையில் வீரர்களுக்கு இடையே கௌதம் கம்பீர் பேசிய சில விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் கௌதம் கம்பீர் கூறியதாவது :

ரிங்கு நீ இது மாதிரியான ஒரு சூழலில் மீண்டும் இந்திய அணியில் இணைவதற்கு பெரிய கேரக்டர் தேவை. ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள். நீ இங்கு தனியாக இல்லை ஒட்டுமொத்த அணியும் உன்னோடு இருக்கிறது. எனவே நீ வலுவாக இருக்க வேண்டும். எதிர்வரும் சில ஆட்டங்கள் தான் நம்மை கோப்பையை நோக்கி கொண்டு செல்லப்போகிறது. எனவே அழுத்தத்தை உணராமல் இயல்பாக விளையாடுங்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு சூழல் அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : ரசிகர்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.. சேட்டா இன்னும் உயர உயர செல்லுங்கள் – சடகோபன் ரமேஷ் வாழ்த்து

ஆனால் அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் பயிற்சி எடுத்தீர்கள். இதுபோன்ற சூழலில் விளையாடத்தான் நீங்கள் உருவாகி உள்ளீர்கள். எனவே அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் உற்சாகமாக செயல்பட்டு இந்திய அணிக்காகவும், நாட்டுக்காகவும் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் என்றும் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement