வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாடியிருந்த இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது உறுதி செய்துள்ளது.
சஞ்சு சாம்சனை வாழ்த்திய : சடகோபன் ரமேஷ்
அந்த வகையில் எதிர்வரும் மார்ச் 5-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக சஞ்சு சாம்சன் திகழ்ந்தார்.
அந்த போட்டியில் 50 பந்துகளை சந்தித்த அவர் 97 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்த அவர் இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றிருந்தார். அவரது இந்த ஆட்டத்திற்கு பிறகு பல்வேறு முன்னாள் வீரர்களும் அவரை பாராட்டி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சடகோபன் ரமேஷ் அவரை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சனிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதுபோன்ற ஒரு முழுமையான ஆட்டத்தை தான். துவக்க வீரராக களமிறங்கி இறுதிவரை நின்று இந்திய அணியை அவர் வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இது போன்ற ஒரு ஆட்டத்தை தான் ரசிகர்களும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். இவ்வளவு திறமையான வீரராக இருக்கும் சஞ்சு சாம்சன் மலை உச்சியில் இருக்க வேண்டிய ஒரு வீரர்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டார் – மைக்கல் கிளார்க் புகழாரம்
ஆனால் அவர் நீண்ட காலமாக சாதாரண நிலையில் சுற்றித்திரிந்தார். இப்போது அவர் விளையாடி இருக்கும் இந்த இன்னிங்ஸ் அவரை இன்னும் அதிக உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இனிவரும் போட்டிகளிலும் அவர் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உயர உயர செல்ல வேண்டும் என சடகோபன் ரமேஷ் அவரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



