- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்டார்க் மாதிரி பும்ரா இருக்காரு.. ஆனா இந்தியா ஜெய்க்க அவருக்கு ஜோடி வேணுமே.. மெக்ராத் கருத்து

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் 17 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இம்முறையும் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, சிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இருப்பினும் இந்திய அணியில் இப்போதும் சில பலவீனங்கள் இருப்பது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது. முதலாவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார் போன்ற டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பகுதி நேர பவுலர்களாக இல்லை என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போல ஹர்டிக் பாண்டியா, சிவம் துபே ஆகிய ஆல் ரவுண்டர்கள் ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாகவே செயல்பட்டனர்.

- Advertisement -

மெக்ராத் கருத்து:
அதை விட வேகப்பந்து வீச்சுத் துறையில் பும்ரா தரமானவராக இருக்கிறார். ஆனால் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அவருக்கு சமமாக செயல்படும் அளவுக்கு இல்லை என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மிட்சேல் ஸ்டார்க் போல இந்தியாவுக்கு பெற்றுக் கொடுக்கும் பவுலராக ஜஸ்ப்ரித் பும்ரா இருப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளன் மெக்ராத் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு நிகராக பந்து வீசி அழுத்தத்தை உண்டாக்கப்போவது யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரின் இறுதியில் ஸ்டார்க் எப்படி அசத்தினார் என்பதை பார்த்தோம். அதே போல டி20 கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு பும்ரா மிகவும் கடினமான ஒரு பவுலராக தெரிகிறார். எனவே ஆஸ்திரேலியா வெல்ல வேண்டுமெனில் ஸ்டார்க் நன்றாக பந்து வீச வேண்டும். ஆஸ்திரேலியா அவரை சார்ந்திருக்கிறது”

- Advertisement -

“அதே போல இந்தியாவுக்கு பும்ரா. ஆனால் பும்ரா நன்றாக பந்து வீசும் போது அவரைச் சுற்றி சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுக்கப் போவது யார்? பும்ரா எந்தளவுக்கு தரமானவர் என்பதை ஐபிஎல் தொடரில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் போல பவுலிங் துறையிலும் உங்களுக்கு இடது வலது கை ஜோடி தேவை. டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் கிடைக்காது”

இதையும் படிங்க: கபில் தேவ் மாதிரி.. சிவம் துபே உழைக்கிறாரு.. ஆனா அந்த விதிமுறை அவரை வீணடிக்குது.. பிளெமிங் பேட்டி

“நீங்கள் ஓரிரு ஓவர்கள் வீசி தயாராவதற்குள் போட்டியே முடிந்து விடும். எனவே உங்களுக்கு ஓப்பனிங்கில் நல்ல சேர்க்கையை கொண்ட பவுலர்கள் இருந்தால் உங்களால் போட்டியை வெல்ல முடியும்” என்று கூறினார். அதாவது வலது கை பவுலரான பும்ராவுக்கு நிகராக இடது கை பவுலர் வேண்டுமென்று மெக்ராத் கூறியுள்ளார். மறுபுறம் இந்திய அணியில் அர்ஷ்தீப் மட்டுமே இடது கை ஃபாஸ்ட் பவுலராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -