நடப்பு 2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய கிளென் மேக்ஸ்வெல்.. என்ன நடந்தது? – விவரம் இதோ

Glenn Maxwell
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள வேளையில் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் மிக முக்கிய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

2025 ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய கிளென் மேக்ஸ்வெல் :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை கூட பூர்த்தி செய்யமுடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களை குவித்துள்ளது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக சாம் கரண் 88 ரன்களையும், டேவால்டு பிரேவிஸ் 32 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாசில் வெற்றி பெற்ற பிறகு அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டான கிளென் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் இடம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இப்படி அவர் தெரிவித்ததும் மேக்ஸ்வெல் ஏன் இந்த போட்டியில் விளையாடவில்லை? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் மட்டுமல்ல எஞ்சியுள்ள 2025 ஐபிஎல் தொடரில் இருந்தே மேக்ஸ்வெல் வெளியேறியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் இடையே விரல் பகுதியில் காயமடைந்த அவருக்கு காயத்தின் தன்மை தீவிரம் அடைந்து விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இனி எஞ்சியுள்ள தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என்பதற்காக தற்போது பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறி நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. மேலும் கூடுதலாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரும் வருகை – சி.எஸ்.கே பிளான்

இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிகப்பெரிய தொகை வழங்கப்பட்ட அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement