நானா இதை புடிச்சேன்.. இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த அபாரமான கேட்ச் பிடித்து – வியந்த மேக்ஸ்வெல், காயத்திலும் எஸ்கேப்

Glenn Maxwell Catch
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் நிரூபித்துள்ளது. மேலும் ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ள இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையை வெல்வதற்கும் தயாராக இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது.

முன்னதாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் ஸ்டார்க், மேக்ஸ்வெல் போன்ற முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பினார்கள். அதன் காரணமாக ஓரளவு முழு பலத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடி 66 ரன்கள் வித்தியாசத்தில் 5 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஆறுதல் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 50 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 352/7 ரன்கள் குவித்தது.

- Advertisement -

வியாப்பான கேட்ச்:
அதிகபட்சமாக டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 96, மார்னஸ் லபுஸ்ஷேன் 72, ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 81, விராட் கோலி 56, ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்கள் எடுத்தது தவிர்த்து ஏனைய வீரர்கள் பெரிய ரன்கள் குவிக்க தவறியதால் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய கிளன் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் காயத்தால் கடந்த 2 போட்டிகளில் விளையாடாத அவர் இந்த போட்டியில் பேட்டிங்கில் 5 ரன்னில் அவுட்டானாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

அதிலும் 81 (57) ரன்கள் விளாசி அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு நல்ல அடித்தளம் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா அவர் வீசிய 21வது ஓவரின் கடைசி பந்தில் நேராக பவுண்டரி அடிக்க முயற்சித்தார். அப்போது தம்மை நோக்கி வந்த பந்தை கையை உள்ளே விட்டுப் பிடித்த அவர் நானா இந்த அற்புதமான கேட்ச்சை பிடித்தேன் என்ற வகையில் ஆச்சரியமான ரியாக்சன் கொடுத்தார். அதே சமயம் ஒருவேளை கொஞ்சம் தவற விட்டிருந்தாலும் முகத்தில் அடி வாங்கி அவர் மீண்டும் காயத்தை சந்தித்திருப்பார் என்றே சொல்லலாம்.

இருப்பினும் சற்று அதிர்ஷ்டத்தின் உதவியுடன் காயத்திலும் தப்பிய அவர் பிடித்த அபாரமான கேட்ச் காரணமாக ரோகித் சர்மா அவுட்டானது போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஏனெனில் அதைத் தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயாஸ், ராகுல், சூரியகுமார் யாதவ் என அனைத்து முக்கிய வீரர்களும் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததால் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement