IPL 2023 : அடுத்த ஐ.பி.எல் தொடரின் முதல் பாதி போட்டிகளில் அவர் விளையாட மாட்டாராம் – சிக்கலில் பெங்களூரு அணி

maxwell
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை தொடர்ந்து தற்போது இந்திய ரசிகர்களின் பார்வை அடுத்ததாக ஐபிஎல் தொடரின் மீது விழுந்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 2023-ல் 16 வது ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது. அந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

RCB Faf Du Plessis

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடருக்கான வேலைகளை தற்போதே மும்முரமாக மேற்கொண்டு வரும் பிசிசிஐ தற்போது அடுத்த சீசனுக்காக மினி ஏலத்தினையும் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடத்த உள்ளது. இந்த மினி ஏலத்தில் சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு பத்து அணிகளிலும் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் தொடரும் துவங்க உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சில வீரர்கள் தொடர்ச்சியாக விலகி வரும் வேளையில் தற்போது பெங்களூர் அணியில் இருந்து முக்கிய ஆல்ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Glenn Maxwell

ஏற்கனவே கடந்த ஆண்டு தனது திருமணம் காரணமாக பாதி போட்டிகளை தவறவிட்ட மேக்ஸ்வெல் இம்முறையும் முதல் பாதி போட்டிகளை தவற விட இருக்கிறார். ஏனெனில் அண்மையில் தனது நண்பரின் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் பங்கேற்க சென்ற அவர் அந்த நிகழ்ச்சியின் போது காலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிகளை தவறவிடுவார் என்றும் பின்னர் ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் தான் அவர் அணியில் இணைவார் என்பதால் அது ஆர்.சி.பி அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வலையில் சிக்கும் இந்த எலிக்கு ஒரு முடிவே இல்லையா? இவருக்கு சஞ்சு சாம்சன் பரவால்லையே – ரசிகர்கள் வேதனை, நடந்தது என்ன

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 301 ரன்களை குவித்துள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 169.10 என அட்டகாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆல்ரவுண்டரான அவர் கடந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் இந்த ஆண்டு அவரால் பங்கேற்க முடியாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement