வலையில் சிக்கும் இந்த எலிக்கு ஒரு முடிவே இல்லையா? இவருக்கு சஞ்சு சாம்சன் பரவால்லையே – ரசிகர்கள் வேதனை, நடந்தது என்ன

Shreyas Iyer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக அருகில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் சூரியகுமார் அதிரடி சதத்தால் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற வெற்றியாளர் தீர்மானிக்கும் 3வது போட்டியில் களமிறங்கியது. நேப்பியர் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவோன் கான்வே 59 (49) ரன்களும் கிளேன் பிலிப்ஸ் 54 (33) ரன்களும் எடுத்ததால் 130/2 என்ற நல்ல நிலைமையில் இருந்தது.

அதனால் 200 ரன்களை எளிதாக தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை டெத் ஓவர்களில் அனலாக பந்து வீசி டார்ல் மிட்சேல் 10, ஜிம்மி நீசம் 0 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு சுருட்டியது. அந்தளவுக்கு அபாரமாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் அரஷ்தீப் சிங் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 161 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிஷன் 10, ரிஷப் பண்ட் 11, ஷ்ரேயஸ் ஐயர் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரிய குமாரும் 13 (10) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

வலையும் எலியும்:
இருப்பினும் முக்கிய நேரத்தில் அதிரடி காட்டிய கேப்டன் பாண்டியா 30* (18) ரன்களை எடுத்ததால் 9 ஓவரில் இந்தியா 79/4 ரன்கள் எடுத்தது. அப்போது மழை வந்த நிலையில் ஆச்சரியப்படும் வகையில் டிஎல்எஸ் முறைப்படி மிகச் சரியான ஸ்கோரை இந்தியா எடுத்திருந்த காரணத்தால் இப்போட்டி சமனில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் 1 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்ற இந்தியா விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் சாதித்துள்ளது.

ஆனால் இப்போட்டியில் தொடக்க வீரர்கள் வழக்கம் போல சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் 3வதாக களமிறங்கி அதிரடி காட்ட வேண்டிய ஷ்ரேயஸ் ஐயர் டிம் சௌதி வீசிய பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதை விட அவர் அவுட்டான விதம் தான் ரசிகர்களை வேதனையில் வாழ்த்தியது. ஏனெனில் பொதுவாகவே சுழல் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கும் இவர் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் தடுமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

அதில் முன்னேறுமாறு வாஷிம் ஜாபர், ஸ்காட் ஸ்டைரிஸ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டும் அதற்காக மெனக்கடாத அவரது பலவீனத்தை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக இருந்த போது தெரிந்து வைத்த பிரண்டன் மெக்கலம் கடந்த ஜூலையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பால்கனியில் அமர்ந்து கொண்டு பிளான் போட்டு தூக்கியது உலக அளவில் வைரலானது. அப்போது முதல் அவர் களமிறங்கும் போதெல்லாம் ஷார்ட் பிட்ச் எனும் வலையை விரித்து எலியை போல் அவரை சொற்ப ரன்களில் எதிரணி பவுலர்கள் அசால்ட்டாக காலி செய்கிறார்கள்.

அதை இப்போட்டியிலும் பயன்படுத்திய டிம் சௌதி அவருடைய நெஞ்சுக்கு சமமான ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்தை வீசினார். ஆனால் அதற்காக எகிறிய ஷ்ரேயஸ் ஐயர் பவுன்ஸ்க்கு மேலே சென்று அடிக்க முடியாமல் சொதப்பியதால் எட்ஜ் வாங்கிய பந்து நேராக தேர்டுமேன் திசைக்கு செல்ல அதை ஜிம்மி நீசம் கச்சிதமாக பிடித்து அவுட் செய்தார். இதை பார்த்து வேதனை அடையும் ரசிகர்கள் இந்தியா போன்ற தரமான அணியில் அந்த பலவீனத்தில் இன்னும் முன்னேறாமல் தடுமாறுவார் என்று தெரிந்தும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அத்துடன் பவுன்சர் பந்துகளை அதிரடியாக எதிர்கொள்வார் என்று தெரிந்த சஞ்சு சாம்சன் மீண்டும் மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்படுவது ஏன் என்று ரசிகர்கள் கோபமடைகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக இப்படி ஷார்ட் பிட்ச் வலையில் எலியை போல் சிக்கி வரும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு இனியாவது வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Advertisement