அரைசதம் அடித்ததன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த மேக்ஸ்வெல் – விவரம் இதோ

Maxwell

பெங்களூரு மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான நடந்த நேற்றைய ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேக்ஸ்வெல் மட்டுமே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு விளையாடினார். 59 ரன்கள் அடித்து அணியை ஒரு நல்ல டீசன்ட் ஸ்கோரை எடுக்க வைத்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

siraj

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். 13 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இதன் காரணமாக பஞ்சாப் அணி அவரை கைவிட்டது. கைவிட்ட மேக்ஸ்வலை இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வாங்கியது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 39 ரன்கள் அடித்து நல்ல பங்களிப்பை அளித்தார். மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் 41 பந்துகளில் 59 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். தன்னுடைய ஆட்டத்தின் மூலம் பெங்களூரு அணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை மேக்ஸ்வெல் ஏற்படுத்தியுள்ளார்.

maxwell

மேலும் குறிப்பாக மேக்ஸ்வெல் கடைசியாக 2016 ஆம் ஆண்டில் தான் அரைசதம் அடித்திருந்தார். அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய போட்டியில் தான் அவர் மீண்டும் அரை சதம் அடித்துள்ளார். இன்னிங்ஸ் படி பார்க்கையில் 40 போட்டிகளை எடுத்துக்கொண்டு 41வது போட்டியில்தான் மேக்ஸ்வெல் இந்த அரை சதத்தை அடித்து உள்ளார். இதன்மூலம் அவர் ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

- Advertisement -

maxwell

அரைசதம் அடிக்க அதிக இன்னிங்சில் இடைவெளி எடுத்துக் கொண்ட வீரர்கள் பட்டியல், முதலிடத்தில் யூசப் பதான் உள்ளார். யூசப் பதான் 49 ஆட்டங்கள் தொடர்ச்சியாக அரை சதம் அடிக்கவில்லை. இரண்டாவது இடத்தில் தீபக் ஹூடா இருக்கிறார், அவர் 48 போட்டிகளாக அரை சதம் அடிக்கவில்லை. மூன்றாவது இடத்தில் டுவைன் பிராவோ இருக்கிறார், அவர் 44 ஆட்டங்களில் தொடர்ச்சியாக எந்தவித அரை சதமும் அடிக்கவில்லை. இவர்களைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் தற்போது மேக்ஸ்வெல் இணைந்துள்ளார், 40 போட்டிகளை எடுத்துக்கொண்டு நான்காவது இடத்தில் மேக்ஸ்வெல் இருக்கிறார்.