போன மேட்ச் அவரு.. இந்த மேட்ச் இவரா? தொடரும் ஆஸ்திரேலிய வீரர்களின் அட்டகாசம் – நடந்தது என்ன?

Maxwell
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் என்கிற பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே குவித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த தொடரின் போது ஆஸ்திரேலியா அணி வீரர்களின் மோசமான செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை பெற்று வருகின்றன. ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியின் போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அப்போது அந்த ரன் அவுட்டுக்கு காரணமாக இருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டான மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் கிண்டல் செய்து களத்திலேயே அவரை சீண்டினார். அவரது அந்த மோசமான செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போதும் ஆஸ்திரேலியா வீரரான மேக்ஸ்வெல் அம்பயரிடம் மோசமாக நடந்து கொண்டது அனைவரது மத்தியிலும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : 17 ஆண்டுகால டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை இந்திய அணி படைப்பது இதுவே முதல்முறையாம் – என்ன தெரியுமா?

ஏனெனில் நேற்றைய போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு எதிராக நோபால் வீசிய அவர் அம்பயரிடம் அது நோபால் இல்லை என்று வாதிட்டார். அதோடு அவரது ஓவரில் ரன்கள் அதிகளவு கசிந்த போது இந்திய வீரர்களை நோக்கி சில வார்த்தைகளையும் அவர் மோசமாக உபயோகித்தார். இப்படி தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் கண்டனத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement