17 ஆண்டுகால டி20 கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை இந்திய அணி படைப்பது இதுவே முதல்முறையாம் – என்ன தெரியுமா?

IND
- Advertisement -

திருவனந்தபுரத்தில் நேற்று நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி இமாலய ரன் குவிப்பை வழங்கியது.

- Advertisement -

குறிப்பாக முதல் ஓவரில் இருந்து ஆரம்பித்த அதிரடி போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை தொடர்ந்தது. இந்திய அணி சார்பாக களமிறங்கிய 6 பேட்ஸ்மேன்களுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 191 ரன்களை மட்டுமே குவித்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் இணைந்து 17 ஆண்டு கால சாதனையை ஒன்றினை முதல் முறையாக நிகழ்த்தி அசத்தியுள்ளனர். அந்த வகையில் நேற்றைய போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்திய வேளையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷனும் அரைசதம் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியில என்னோட ரோல் இதுதான்.. தெளிவாக இருக்கேன்.. அதுவே என் அதிரடிக்கு காரணம் – ரிங்கு சிங் பேட்டி

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் ஒரே போட்டியில் டி20 போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பாக டி20 கிரிக்கெட்டின் ஒரே போட்டியில் மூன்று வீரர்கள் அரை சதம் அடித்திருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்தில் களமிறங்கி அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement