நான் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிக்கோங்க. நானும் மனுஷன் தானே – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மேக்ஸ்வெல்

Maxwell
Advertisement

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி அதிரடி வீரரான மேக்ஸ்வெல் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 7 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்படுவதால் ஒரு ஆல்-ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் முக்கிய இடம் பிடித்து விளையாடி வருகிறார். இவர் தனது கிரிக்கெட் கரியரை ஆரம்பித்த காலத்தில் மிக அதிரடியாக விளையாடி பவுலர்களை அச்சுறுத்தியதோடு பந்துவீச்சிலும் அசத்தியதால் அடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் என்றெல்லாம் பேசப்பட்டார்.

Maxwell

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது மோசமான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்படும் நிலைமைக்கும் வந்தார். பின்னர் உள்ளூர் கிரிக்கெட், பிக்பேஷ் என மீண்டும் தனது திறனை வெளிப்படுத்த தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் மேக்ஸ்வெல் தான் செய்வது தவறு என்று தெரிந்து மீண்டும் தனது தவறை சரிப்படுத்திக் கொண்ட தருணம் குறித்து தற்போது வெளிப்படையாகப் பேசி ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் என் வாழ்நாளில் மிகப்பெரிய தவறை செய்துள்ளதாக நினைக்கிறேன். ஏனெனில் கடந்த கால கட்டத்தில் நான் கிரிக்கெட் விளையாடும் போது மிகவும் அலட்சியமாக செயல்பட்டு உள்ளேன். ஒரு சில போட்டிகளை நான் பெரிய போட்டிகளாகவே நினைத்தது கிடையாது. அலட்சியமாக விளையாடிவிட்டு ஆட்டமிழந்து வெளியேறியுள்ளேன். அதேபோன்று ஒரு கட்டத்தில் நான் பெரிய போட்டிகளை கூட பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் மெத்தனமாக செயல்பட்டு உள்ளேன்.

Maxwell

முக்கியமான போட்டிகளில் கடுமையாக உழைத்து அணிக்கு பங்களிப்பை வழங்குவது அவசியம். ஆனால் நான் அப்படி செய்தது கிடையாது. இதனாலேயே என் மீது பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டது. என் திறமைக்கு உண்டான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றும் பலரும் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் கூறியது அனைத்துமே உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். செய்த தவறுகளிலிருந்து நம்மை திருத்திக் கொண்டு மீண்டும் மன்னிப்பு கேட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

நானும் மனிதன் தானே தவறு என்பது இயல்புதான். நான் முன்பு போன்று இல்லாமல் தற்போது கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொண்டு கடுமையாக உழைத்து வருகிறேன். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் நான் சிறப்பாக பயன்படுத்தி நான் விளையாடும் அணிகளுக்கு வெற்றியை தேடித் தர விரும்புகிறேன். எனவே இப்போதெல்லாம் நான் எந்த போட்டியாக இருந்தாலும் மிகவும் சீரியஸாக எடுத்து எனது செயல்பாட்டை முழு அளவில் வெளிப்படுத்தி வருகிறேன்.

இதையும் படிங்க : யாருமே என்னை நம்பல. ஆனா அவரு நம்புனாரு. அதுவே நான் ஐ.பி.எல்-ல் அசத்த காரணம் – சஹா வெளிப்படை

அதோடு கடந்த காலத்தில் தான் செய்த தவறுகளுக்காக ரசிகர்களிடம் மேக்ஸ்வெல் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த இரு ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரிலும் பல சீசன்கள் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement