நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற இந்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
Atleast @RishabhPant17 knows I love him???? omg look at how he blushed in the end???????? #RishabhPant pic.twitter.com/9ktmY87r4D
— Salvi (@salvipatell) September 21, 2019
தென்ஆப்பிரிக்க அணி அடுத்தாக தற்போது இந்திய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்விளையாட இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் மூன்றாவது போட்டி நடக்கும் முன் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த பண்ட் ரசிகர்களிடம் ஆட்டோகிராப் கொடுக்க சென்றார்.
அப்போது ஒரு இளம் பெண் ரிஷப் பண்ட்டை நோக்கி ஐ லவ் யூ என்று கத்த அதற்கு சிரித்தபடி தனது ரியாக்ஷனை காண்பித்து ரிஷப் பண்ட் அங்கிருந்து சென்றார். இந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.