அறிமுக போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மகத்தான சாதனையை படைத்த கில் – விவரம் இதோ

Gill-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியால் இந்திய இன்றைய போட்டியில் நான்கு முக்கிய மாற்றங்கள் இருந்தன. அதன்படி கேப்டன் கோலிக்கு பதிலாக ஜடேஜாவும், விக்கெட் கீப்பர் சகாவுக்கு பதிலாக பண்ட்டும் அணியில் இடம் பெற்றனர். அதேபோன்று இந்த போட்டியில் புதுமுக வீரர்கள் 2 பேர் இந்திய அணிக்காக அறிமுகமாயினர்.

siraj

- Advertisement -

முதல் போட்டியில் சொதப்பிய ப்ரித்வி ஷாவிற்க்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணிக்காக அறிமுகமானார்கள். முகமது சிராஜ் ஷமிக்கு மாற்று வீரர் என்றாலும் இந்தியா ஏ அணி மற்றும் ரஞ்சி கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோன்று கடந்த பல தொடர்களாக இந்திய அணியுடன் பயணித்த கில் இந்த போட்டியில் முதன்முறையாக வாய்ப்பினை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க அடுத்ததாக தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே அகர்வாலின் விக்கெட்டை இழந்தது. 6 பந்துகளை சந்தித்த அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கில் சிறப்பாக விளையாடி வந்தார். புஜாராவும் ஒருகட்டத்தில் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Gill 2

அதன் பின்னர் அதில் பலரும் எதிர்கொள்ள தயங்கும் இந்த வேகமான ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் கூட அதிரடியாக விளையாடிய கில் 65 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்களை குவித்து அசத்தினார். எந்தவித பயமும் இன்றி இவர் விளையாடிய இந்த ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இவரது இந்த ஆட்டம் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இவர் அடித்த இந்த 45 ரன்கள் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு மாயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அறிமுகமாகி 72 ரன்கள் குவித்து அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்திலும், தட்டு படிக்கர் # 1947ஆம் ஆண்டு 51 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்த போட்டியில் 45 ரன்கள் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகி அந்த போட்டியில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பட்டியலில் மூன்றாவது இடத்தை கில் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மண்ணில் இவர் அடித்த 45 ரன்கள் இந்தியாவில் நிச்சயம் சதத்தை தொட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு என்று பலரும் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement