- Advertisement -
ஐ.பி.எல்

மகளிர் ஐபிஎல்: 125 ரன்ஸ்.. பழைய ஃபார்முக்கு திரும்பிய ஆர்சிபி? ஹாட்ரிக் தோல்வியால் நெருக்கடியான பிளே ஆஃப்

இந்தியாவில் மகளிர் ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 27ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் மந்தனா தடுமாற்றமாக விளையாடி 10 (20) ரன்னில் அவுட்டானார்.

போதாக்குறைக்கு டேனியல் வைட் 4, எலிஸ் பெரி 0 ரன்களில் அவுட்டானதால் 25-3 என ஆரம்பத்திலேயே பெங்களூரு திணறியது. அந்த நிலையில் மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய ராக்வி பிஸ்த் 22, கனிகா அகுஜா 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். இறுதியில் ரிச்சா கோஸ் 9, கிம் கார்த் 14, ஜார்ஜியா வேர்ஹம் 20* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பெங்களூரு சொதப்பல்:

அதனால் 20 ஓவரில் பெங்களூரு 125-7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக தனுஜா கன்வர் 2, டோட்டின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 126 ரன்களை துரத்திய குஜராத்துக்கு பெத் மூனி 17, தயாளன் ஹேமலதா 11, ஹர்லின் தியோல் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் அந்த அணியும் 66-3 என தடுமாற்றமான துவக்கத்தையே பெற்றது.

இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஆஸ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடினார். மிடில் ஓவர்களில் பெங்களூரு பவுலர்களை நொறுக்கிய அவர் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (31) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து பெவெலியன் திருப்பினார். இறுதியில் ஃபோப் லிச்பீல்ட் 30* (21) ரன்கள் எடுத்ததால் 16.3 ஓவரிலேயே 126-4 ரன்களை எடுத்தது.

- Advertisement -

ஹாட்ரிக் தோல்வி:

அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி 5 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூருவுக்கு அதிகபட்சமாக ரேணுகா சிங் ஜார்ஜியா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. நடப்புச் சாம்பியன் பெங்களூரு அணி தங்களது முதல் 2 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று அசத்தியது.

இதையும் படிங்க: மேக்ஸ்வெல் மட்டும் தான் மொத்த ஆஸியா? 2023 உ.கோ தோல்விக்கு பதிலடி கொடுத்ததை மறக்காதீங்க.. ஷாஹிதி பேட்டி

ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் சுமாராக விளையாடிய அந்த அணி இதையும் சேர்த்து ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஆர்சிபி அணி பழைய ஃபார்முக்கு திரும்பி விட்டதா? என்று சமூக வலைதளங்களில் எதிரணி ரசிகர்கள் பேசுகின்றனர்.

- Advertisement -