- Advertisement -
உலக கிரிக்கெட்

அவரோட விக்கெட் எடுத்ததுமே நம்பிக்கை வந்துடுச்சு.. இந்தியாவை சாய்த்த திட்டம் பற்றி.. ஜெப்ரி பேட்டி

இலங்கைக்கு இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 240/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெர்னாண்டோ 40, குசால் மெண்டிஸ் 30, கமிண்டு மெண்டிஸ் 40, வெல்லலாகே 39 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3, அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடிய 64 (44) ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் சுப்மன் கில் 35, விராட் கோலி 14, சிவம் துபே 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுல் 0 ரன்களில் அவுட்டாகி இந்தியாவை அழுத்தத்தில் தள்ளினர்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஜெப்ரி:
அதனால் அக்சர் படேல் 44, வாஷிங்டன் சுந்தர் 15 ரன்கள் எடுத்தும் 42.2 ஓவரில் இந்தியா 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. மறுபுறம் அந்தளவுக்கு அற்புதமாக பந்து வீசி இந்தியாவை தோற்கடித்த இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள இலங்கை 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வெற்றிக்கு சந்தேகமின்றி 26 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஜெஃப்ரி வண்டெர்சே ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில் ஹஸரங்கா சூழ்நிலையை உணர்ந்து விளையாடியதாக தெரிவிக்கும் அவர் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்ததும் தம்முடைய தன்னம்பிக்கை அதிகரித்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் அணிக்குள் வரும் போது நிறைய அழுத்தம் இருந்தது. நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. இதற்கான பாராட்டை நான் எடுத்துக் கொள்வது எளிது. இருப்பினும் நான் எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கும் பாராட்டு கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் 240 ரன்கள் அடித்த அவர்கள் நான் சிறந்த இடங்களில் பந்து வீச உதவினார்கள். எங்களின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ஹசரங்கா காயத்தால் வெளியேறினார்”

இதையும் படிங்க: 32 ரன்ஸ்.. 12க்கு 1.. வேதனையை உடைத்த இலங்கை.. அஜந்தா மெண்டிஸ்க்கு பின் இந்தியாவை ஓடவிட்ட ஃஜெப்ரி.. அபார சாதனை

“அப்போது வந்த நான் அணியின் நிலைமையையும் சமநிலையையும் புரிந்து கொண்டேன். அதனால் என்னை நானே தள்ளினேன். பிட்ச்சில் நல்ல உதவி இருந்தது. எனவே அதில் நான் நல்ல இடத்தில் பந்தை அடிக்க முயற்சித்தேன். ரோஹித் சர்மாவின் முதல் விக்கெட்டை எடுத்ததும் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்தது. அப்படியே அதிர்ஷ்டவசமாக நான் 6 விக்கெட்டுகளை எடுத்தேன்” என்று கூறினார்.

- Advertisement -