DC vs KXIP : கெயில் அடித்த பந்தை அட்டகாசமாக கூட்டணி சேர்ந்து கேட்ச் பிடித்த டெல்லி வீரர்கள் – வீடியோ

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி வீரரான கெயில் 37 பந்துகளில் 69 ரன்களை அடித்து பஞ்சாப் அணி 163 ரன்களை குவிக்க உதவினார். இந்த போட்டியில் பிரமாதமாக ஆடிக்கொண்டிருந்த

Gayle
- Advertisement -

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி வீரரான கெயில் 37 பந்துகளில் 69 ரன்களை அடித்து பஞ்சாப் அணி 163 ரன்களை குவிக்க உதவினார். இந்த போட்டியில் பிரமாதமாக ஆடிக்கொண்டிருந்த அவர் சந்தீப் வீசிய ஓவரில் பந்தினை தூக்கி அடித்தார். அந்த பந்து பவுண்டரி லைனுக்கு பறந்தது அப்போது எல்லைக்கோட்டிலிருந்த இன்கிராம் பந்தினை எகிறி கட்சித்தமாக பிடித்தார். பிடித்த உடன் தன்னுடைய நிலை தடுமாறிய அவர் சுதாரித்து கொண்டு பந்தினை அக்சர் பட்டேல் நோக்கி வீசிவிட்டு எல்லைக்கோட்டினை தாண்டி விழுந்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

அந்த பந்தினை அக்சர் பட்டேல் பிடிக்க கெயில் அவுட் ஆனார். இந்த கேட்ச் இந்த தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பான கேட்ச் என்று ராசிகள் இணையத்தில் அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.

Advertisement