- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த தவறை முகத்துக்கு நேரா சொல்லி சிராஜை டீமை விட்டு தூக்குங்க – சுனில் கவாஸ்கர் கொந்தளிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அந்நாட்டு அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த ஆஸ்திரேலியா தொடரில் மூன்று அல்லது நான்கு வெற்றியை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்ற நிலை இருந்தது.

முகமது சிராஜை அணியில் இருந்து நீக்க வேண்டும் :

இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. ஆனாலும் இந்த தொடரின் முதல் போட்டியை தவிர அதற்கடுத்த எந்த போட்டியிலும் இந்திய அணி பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பந்துவீச்சு துறையில் பும்ரா தவிர்த்து பெரியளவில் எந்த ஒரு பவுலரும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் பும்ரா மட்டுமே 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஆனால் மற்ற இந்திய வீரர்களிடம் இருந்து பெரிய செயல்பாடு வெளிவரவில்லை.

அதிலும் குறிப்பாக முன்னணி வீரராக பார்க்கப்படும் முகமது சிராஜ் நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 23 ஓவர்களை வீசி 122 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாதது மோசமான செயலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நான்கு போட்டிகளிலும் விளையாடிய அவரை ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : முகமது சிராஜுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஓய்வு என்றால் வீட்டிற்கு அனுப்பி ஓய்வு கொடுப்பதல்ல. இந்திய அணியில் இருந்து நீக்கி சில காலம் அவரை உள்ளூர் போட்டியில் விளையாட வைக்க வேண்டும். ஏனெனில் முதன்மை வீரராக இருந்து கொண்டு இப்படி ஒரு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும்போது அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்கக் கூடாது.

இதையும் படிங்க : போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட என்ன காரணம்? – விவரம் இதோ

வேகப்பந்து வீச்சுக்கு உதவும் ஆஸ்திரேலியா மைதானங்களில் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்றால் அவரது பவுலிங் பார்ம் மோசம் என்றுதான் அர்த்தம். அந்த வகையில் அவரது குறையை அவருக்கு முகத்திற்கு நேராக சொல்லி அவரை ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மீண்டும் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரை அணியில் இணைக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -