நீங்க ஸ்ட்ரென்த்னு நெனைக்குற இதுதான் உங்களோட வீக்னஸ். கேப்டன் ரோஹித்துக்கு – கவாஸ்கர் எச்சரிக்கை

Gavaskar
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 2-வது டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதி இன்று பெங்களூருவில் துவங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு துவங்கிய இந்தப் போட்டியானது பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடப்பட்டு வருகிறது. இது போன்ற பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

jadeja

- Advertisement -

முன்னதாக 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியிலும் அபார வெற்றி பெற்று டி20 தொடரைப் போல மீண்டும் வைட்வாஷ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டனாக கலக்கும் ரோஹித் சர்மா ஆனால்:
இந்த தொடரில் முதல் முறையாக இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த நவம்பர் மாதம் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன்சிப் பதவியும் வழங்கப்பட்டது. அதன்பின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி திடீரென அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் அவர் கேப்டனாக செயல்பட துவங்கி உள்ளார்.

Rohith

கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுவரை அவர் கேப்டன்ஷிப் செய்த 13 போட்டிகளிலும் இந்தியாவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் அமர்க்களப் படுத்தி வருகிறார். இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அவர் பெரிய அளவில் ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார்.

- Advertisement -

புல் ஷாட் வேண்டாம் ப்ளீஸ்:
குறிப்பாக சமீபகாலங்களாக அவர் தமக்கு மிகவும் பிடித்த புல் ஷாட் ஆடப்போய் அவுட்டாவது தொடர்கதையாகி வருகிறது. உலக கிரிக்கெட்டில் ஷார்ட் பால் பந்துகளை வீசினால் அதை அப்படியே லாவகமாக பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கும் ஷாட் தான் புல் ஷாட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஷாட்டை அற்புதமாக அடிப்பதில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் வல்லவர். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரோகித் சர்மா அந்த புல் ஷாட்டை அசால்ட்டாக அடித்து அவரையும் மிஞ்சும் அளவுக்கு ரசிகர்களிடையே பெயர் பெற்றுள்ளார். இருப்பினும் சமீப காலங்களாக அந்த ஷாட் அடிக்கப்போய் அவர் சொற்ப ரன்களில் அவுட்டாவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சிறிது காலத்திற்கு புல் அடிப்பதை ரோகித் சர்மா நிறுத்த வேண்டும் என இந்தியாவின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இது அவரின் மிகசிறந்த ஷாட் என நீங்கள் விவாதிக்கலாம். ஆனால் ரன்களை குவிக்க அதுமட்டுமே வழியல்ல. தற்போதெல்லாம் அந்த வகையில் தான் அவர் அதிகமாக அவுட் ஆகிறார். சொல்லப்போனால் சற்று வேகத்துடன் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் அவரை புல் ஷாட் அடிக்க ஆசைகாட்டி எளிதாக அவுட் செய்து விடுகிறார்கள். அதை அடிப்பதன் வாயிலாக ஒருசில பவுண்டரி அல்லது சிக்ஸர்கள் கிடைக்கலாம்.

- Advertisement -

ஆனால் அதை அடிக்கும்போது பெரும்பாலான நேரங்களில் பந்து காற்றில் சென்று கேட்ச்சாக மாற வாய்ப்புள்ளது” என கூறினார். அவர் கூறுவது போல மொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை பவுலர் லஹிரு குமாரா வீசிய ஒவரின் முதல் 2 பந்துகளில் புல் ஷாட் அடித்த ரோகித் சர்மா பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். எனவே சதம் போன்ற பெரிய ரன்களை அடிக்க நினைத்தால் புல் ஷாட் அடிக்க நினைப்பதை ரோகித் சர்மா த்ற்போதைக்கு தவிர்க்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Rohith

ட்ரேட்மார்க் புல் ஷாட்:
“அதன் வாயிலாக நிறைய சதவீத ரன்களை குவிக்க முடியும் என அவர் நினைத்தால் தாராளாமாக அடிக்கலாம். ஆனால் தற்போதைய நிலைமையில் புல் ஷாட் அவருக்கு சாதகமாக அமைவதில்லை. எனவே தற்போதைய நிலைமையில் 80, 90, 100 ரன்கள் அடிக்கும் வரை அதை தவிர்த்து விட்டு அதன் பின் புல் ஷாட் அடிக்க வேண்டும்” என இதுபற்றி சுனில் கவாஸ்கர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : முக்கியமான போட்டியில் வலுவான வெ.இண்டிசை பந்தாடிய இந்திய பெண்கள் அணி பெற்ற மாஸ் வெற்றி – எப்படி நடந்தது?

பொதுவாக கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு என்று ஒரு ட்ரேட்மார்க் ஷாட் வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிக்க பிடிக்கும். அதேப்போல் எம்எஸ் தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில் வல்லவர். அந்த வரிசையில் ரோகித் சர்மா புல் ஷாட் அடிப்பதில் வல்லவர் என்றாலும் தற்போதைய நிலைமையில் அதை கொஞ்சம் தவிர்க்க வேண்டுமென சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement