- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனியும் பைனலுக்கு போக இந்திய அணிக்கு வாய்ப்பு இல்ல.. எனவே இந்த மாற்றத்தை செய்யுங்க – கவாஸ்கர் அட்வைஸ்

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக அடியிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியின் போது மோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

இந்திய டெஸ்ட் அணிக்குள் மாற்றத்தை கொண்டுவாங்க :

அதனை தொடர்ந்து பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற நான்காவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது. இதன் காரணமாக இந்த தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதும் கனவாகியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டிரா செய்தாலே இந்திய அணியின் வாய்ப்பு பறிபோகிவிடும். ஒருவேளை இந்திய அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வது வாய்ப்பில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடி வரும் சீனியர் வீரர்கள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சிட்னி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை நான்காவது போட்டியில் தோல்விக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி செல்லும் வாய்ப்பு கடினமாக மாறிவிட்டது.

- Advertisement -

ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அது நமது வாய்ப்பை பலப்படுத்தாது என்று நினைக்கிறேன். அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சர்க்கிள் ஜூன் மாதம் இங்கிலாந்தில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு பைனல் நடக்கும். எனவே என்னை பொறுத்தவரை இந்திய அணியில் உள்ள அனுபவ வீரர்களை அவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த முடிவை தேர்வுக்குழுவினர் தான் எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு 3 – 4 வருஷம் இருக்கு.. ஆனா இதையே நகர்த்த முடியாத ரோஹித் ரிட்டையராகலாம்.. சாஸ்திரி கருத்து

சீனியர்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. அதிலும் குறிப்பாக டாப் ஆர்டரில் விளையாடும் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றால் கீழ் வரிசையில் உள்ளவர்களையும் குறை சொல்ல முடியாது. எனவே சீனியர் வீரர்ககளை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -