இப்படி ஒரு திறமையான வீரருக்கு ஏன் சென்னை டெஸ்டில் வாய்ப்பு கொடுக்கல – கோலிக்கு எதிராக கேள்வி எழுப்பிய கவாஸ்கர்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Sundar 2

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கடினமான இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாடிய இந்திய அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து.

இதன் காரணமாக இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணி அடைந்த இந்த தோல்வி பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது.

Nadeem

இந்நிலையில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்க்காதது ஏன் என்பது குறித்து கவாஸ்கர் தற்போது கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதல் டெஸ்டில் அஸ்வின் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு ஆப் ஸ்பின்னர்களுடன் குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் சுழற்பந்து வீச்சில் மாறுதல் இருந்திருக்கும். இந்த போட்டியில் நதீம் சற்றுப் பதற்றத்துடன் பந்துவீசினார். அதனாலேயே அவர் அதிகளவில் நோ பால்களைக் வீசினார். பதற்றத்துடன் பந்துவீசும் போது இதுபோன்று நோபால் வீசுவது இயல்பு தான்.

Kuldeep

ஆனாலும் அனுபவம் வாய்ந்த அஷ்வின் கூட இந்த போட்டியில் நோ பால்களை வீசினார். இந்த முதல் போட்டியில் ஏற்பட்டுள்ள சரிவை சமாளிக்க வேண்டுமெனில் அடுத்து வரும் போட்டிகளில் குல்தீப் யாதவ் இடம்பெறவேண்டும். அவரின் திறமை நிச்சயம் வரும் போட்டிகளில் வெளிப்படும். ஏற்கனவே அவர் ஒரு திறமையான வீரர் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்பதில் தவறில்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதல் போட்டியில் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை என்பதும் நதீம் அதிக அளவு நோபால் வீசியதையும் கவஸ்கர் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement