கடைசி போட்டியில் ராகுல் விளையாடாததும் நல்லது தான். ராகுலை வெறுப்பேற்றும் படி பேசிய கவாஸ்கர் – விவரம் இதோ

gavaskar

இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகளில் சேர்த்து 15 ரன்கள் மட்டுமே அடித்து மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அவர் தொடர்ந்து டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன்காரணமாக ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அவர் நீக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவரை அணியில் இருந்து நீக்கி விராட் கோலி களமிறங்கினார்.

rahul

அப்படி துவக்க வீரராக களமிறங்கிய கோலி மற்றும் ரோகித் ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக கையாண்டு 9 ஓவர்களில் 90 ரன்கள் குவித்து சிறப்பான தொடக்கம் அளித்தது. இவர்களின் சிறப்பான துவக்கத்தை அப்படியே பின்பற்றிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 224 என்ற பெரிய ரன் குவிப்பை எடுத்தது. இந்த பெரிய ரன் குவிப்பே கடைசி போட்டியின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

இந்நிலையில் அந்த போட்டியில் ராகுல் நீக்கப்பட்டது குறித்து பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராகுலின் நீக்கம் குறித்து பேசிய உள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில் : டி20 போட்டியை பொருத்தமட்டில் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் அந்த வகையில் பார்மில் இல்லாத ராகுல் வெளியேறியது நல்லதாகப் போயிற்று.

rahul 1

அதனால்தான் கோலி தொடக்க வீரராக களமிறங்கினார். சச்சின் கூட ஆரம்பத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் தான் விளையாடி வந்தார். அதன்பிறகு தொடக்க வீரராக விளையாட ஆரம்பித்த பிறகு அவரது கேரியரே மாறியது. அதே போன்று தற்போது ராகுல் வெளியேற்றப்பட்டு கோலி அந்த இடத்திற்கு வந்து பெரிய பலத்தை தந்துள்ளது.

- Advertisement -

Rohith-1

ரோகித் மற்றும் கோலியின் தொடக்க ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. இனி இந்திய அணியில் இந்த ஜோடி துவக்க ஜோடியாக தொடரலாம் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.