ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி பல்வேறு விமர்சனங்களை கொண்டு வந்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற இந்த முதல் போட்டியில் முதலாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 191 மட்டுமே குவிக்க இந்திய அணி 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் போது 36 ரன்களில் ஆட்டமிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த போது இந்திய அணியின் பீல்டிங் மோசமாக அமைந்தது. ஒரே வீரருக்கு கேட்சியை தவற விட்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் பேட்டிங் செய்யும்போது விக்கெட் கீப்பர் சஹா, பீல்டர்கள் பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் மற்றும் பும்ரா ஆகியோர் தொடர்ச்சியாக கேட்சை தவறவிட்டனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு அருகில் சென்றது. இந்த பீல்டிங் குறைபாடுகளால் இந்திய அணி சற்று மோசமான நிலைக்கு அழைத்துச் சென்றது என்று கூட கூறலாம். இந்நிலையில் இந்த மோசமான பீல்டிங் குறித்து தற்போது பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில் : இந்திய அணி வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
"All I can think of is the Indians are in a Christmas mood. Giving their Christmas gifts a week early." – Sunil Gavaskar 😅 #AUSvIND https://t.co/Bh2v9ZtTZP
— 7Cricket (@7Cricket) December 18, 2020
அதனால்தான் முன்கூட்டியே தங்களது கிறிஸ்மஸ் பரிசுகளாக ஆஸ்திரேலிய வீரர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வீணடித்து உள்ளனர் என காட்டமாக இந்திய அணியின் பீல்டிங் குறைபாடுகளை விமர்சித்துப் பேசியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ஏற்பவே ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுத்தவரை ஒரு வாய்ப்பு என்பது பெரிய விடயம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நாம் அறிந்ததே.
அதனால் கிடைக்கும் ஒரு கடினமாக வாய்ப்பை கூட சாதகமாக மாற்ற வேண்டிய நிலையில் எளிதாக கேட்சிகளை இந்திய அணி வீரர்கள் கோட்டைவிட்டது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும் சொதப்பியதால் அடுத்த போட்டியின் போது அவர்கள் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.