இந்திய வீரர்கள் என்ன தப்பு பண்ணாங்க ? நீங்க பண்றது தான் தப்பு. பி.சி.சி.ஐ க்கு எதிராக குரல் கொடுத்த – கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் தற்போது அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் செய்வதறியாது வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற அடுத்த சிலமாதங்களுக்கு வாய்ப்பில்லை.

Ind

- Advertisement -

இதனால் இந்தியாவில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐ.பி.எல் தொடரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கடுத்தும் இந்த தொடர் துவங்குமா ? என்பது கேள்விக்குறிதான். இதனால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி அனைத்து விளையாட்டு துறையை சேர்ந்த நிர்வாகங்களுக்கு கடினமான காலம் என்றே கூறலாம்.

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ஓய்ந்து எப்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டுப்போட்டிகள் தடையின்றி சகஜமாக திரும்பும் நிலை ஏற்படும் என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த எதிர்பாராத இடர்பாடுகளால் விளையாட்டுப்போட்டிகள் தள்ளிப் போதல் மற்றும் ரத்து செய்தல் ஆகியவை விளையாட்டு அமைப்புகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

IND-2

குறிப்பாக பணம் கொழிக்கும் இந்தியா, இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் வாரியங்களும், பல்வேறு நாட்டைச் சேர்ந்த கால்பந்து கிளப்புகள் மற்றும் விளையாட்டு சங்கம் அனைத்திற்கும் இது ஒரு பெரிய வருவாய் இழப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது அந்த விளையாட்டுத்துறை நிர்வாகங்களும் தங்களது வீரர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத சம்பளத்தை குறைத்து வழங்க முடிவு செய்திருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா தெரிவிக்கையில் : கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இந்திய வீரர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : எந்த ஒரு விளையாட்டிலும் நீங்கள் விளையாடாவிட்டால் உங்களுக்கு சம்பளம் கிடைக்காது.

அதேபோல் தான் இந்த விஷயத்திலும் நடக்கும் இந்திய அணி வீரர்கள் மற்றும் முதல்தர வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்து வழங்க வேண்டும் என்று அவர் கூறியதை பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. கிரிக்கெட் வாரியத்திற்கு ஆதரவாக அவர் செயல்பட முயற்சிக்கிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனாலும் நிலைமை இவ்வாறு இருக்கும்போது வீரர்களின் மீது பழி சுமத்துவது தவறு சம்பளம் குறைப்பு பற்றி பேசுவது தேவையில்லாத ஒரு விடயம் என்றும் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement