என்னது நான் லீவ் கேட்டேனா ? கோலியுடன் ஒப்பிட்டு பேசிய கபில் தேவ் – கவாஸ்கர் கொடுத்த விளக்கம்

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட தற்போது இந்திய அணி அந்நாட்டிற்கு சென்றிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 4 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடக்க இருக்கிறது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று முடிந்து டி20 போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. இந்த இரண்டு தொடரும் நடைபெற்று முடிந்த பின்னர் டிசம்பர் 17ஆம் தேதி டெஸ்ட் தொடர் துவங்கியிருக்கிறது. ஜனவரி இறுதி வரை இந்த நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்பி விடுவேன் என்று அறிவித்திருக்கிறார். ஏனெனில் விராட் கோலியின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் விரைவில் அவர்களுக்கு முதல் குழந்தையும் பிறக்க இருக்கிறது. அந்த மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் தனது மனைவியுடன் இருக்க திட்டமிட்டிருக்கிறார். இதன் காரணமாகத்தான் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாமல் இந்தியாவுக்கு திரும்புகிறார். விராட் கோலியின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் 1976ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் குழந்தை பிறந்ததாகவும் ஆனால் அதனை காரணம் காட்டி பாதியில் இந்தியாவிற்கு அவர் திரும்பவில்லை என்றும் கபில்தேவ் பெருமைப்பட கூறியிருந்தார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சுனில் கவாஸ்கர் விடுமுறை கேட்டதாகவும் ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

India Cricket

இந்நிலையில் இந்த இருவர் விமர்சனங்களுக்கு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில் “நான் ஒன்றை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கே குழந்தை பிறக்கும் போது நான் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று விடுமுறை கேட்கவில்லை. சுற்றுப் பயணத்திற்கு கிளம்பும் போதுதான் எனது மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரியும். ஆனால் நான் இந்தியாவிற்காக விளையாடப் போகிறேன் அதற்காக என் மனைவி எனக்கு முழுமையாக ஆதரவு கொடுத்தார்.

gavaskar

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது காயம் ஏற்பட்டது. மருத்துவர்கள் அந்த நேரத்தில் நான்கு வாரங்கள் ஓய்வு எடுத்துக் கூறினார்கள். இந்த நேரத்தில் தான் இந்தியாவிற்குச் சென்று எனது குழந்தையை பார்த்து விட்டு திரும்பி வருவதாக அனுமதி கேட்டேன் அப்போதும் எனக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதுதான் உண்மையாக நடந்தது” என்று கூறியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

Advertisement