அவரை முதல் முறை பார்க்கும்போது ஸ்கூல் பையன்னு நெனச்சிட்டேன் – பஞ்சாப் பவுலர் குறித்து பேசிய கவாஸ்கர்

Gavaskar

நேற்று இரவு நடந்த நான்காவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரிட்சை மேற்கொண்டனர். போட்டியின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 221 என்கிற இமாலய இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் கே எல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தினார். இவரது பங்களிப்பால் பஞ்சாப் அணியால் எளிதாக 221 ரன்கள் எடுக்க முடிந்தது.

rrvspbks

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்திலேயே பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. பென் ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆகி போக, பென் ஸ்டோக்ஸ் போன வேகத்தில் மனன் வோரா 12 ரன்களில் நடையை கட்ட அதன் ராயல்ஸ் அணி மிகவும் பரிதாபத்திற்குரிய நிலைக்கு ஆளானது. ஒரே ஆளாக நின்று கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 119 ரன்கள் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இலக்கை நோக்கி நகர்த்திச் சென்றார். இருந்த போதிலும் கடைசி பந்தில் ஒரு அவுட்டாகி விட 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்தது.

நேற்று பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரன், ஜய் ரிசர்ட்சன், ரிலே மெரெடித் ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் நேற்று பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ரிச்சர்ட்சனை நான் முதன் முதலில் பார்க்கையில் ஸ்கூல் பையன் என்று நினைத்துக் கொண்டேன் என்று கலகலப்பாக பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் :நான் அவரை விமானத்தில் பயணிக்கும் பொழுது முதன்முதலாகப் பார்த்தேன். அப்பொழுது அவர் ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு மிகவும் இளமையாக காணப்பட்டார். நான் கூட அவர் எதோ ஒரு ஸ்கூல் பையன் தான் என்று முதலில் நினைத்தேன்.

richardson

பின்னர் சைமன் டோல் சொல்லி தான் எனக்கு தெரிந்தது அவர் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் என்று. நான் இதை கிண்டலடிக்கும் விதமாக சொல்லவில்லை, அவர் பார்க்க மிகவும் இளமையாக இருந்தார். அதன் காரணமாகவே அவரை நான் ஸ்கூல் பையன் என்று நினைத்துக் கொண்டேன் என்று கூறி விளக்கம் அளித்தார். நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ரிச்சர்ட்சன் 4 ஓவரில் 55 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார். இருந்தபோதிலும் அவர் கைப்பற்றிய விக்கெட் ஜோஸ் பட்லரின் ஆகும்.

- Advertisement -

richardson 1

12 பந்துகளில் மேற்கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் குவித்து இருந்தார். அவரை அதற்கு அடுத்த பந்திலேயே ரிச்சர்ட்சன் நடையை கட்ட வைத்தார். இதன் காரணமாகவே இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஒருவேளை பட்லர் இருந்திருந்தால் பட்லரும் சாம்சனும் சேர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிச்சயமாக வெற்றி பெற வைத்திருந்துருப்பார்கள்.