இந்திய டி20 அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். அவர் சூப்பர் பவுலர் – கவாஸ்கர் ஆதரவு

Sunil-gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டது.

IND

- Advertisement -

ஒரு கட்டத்தில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தூக்கி நிறுத்தினார். ஜடேஜாவிற்கு மாற்று வீரராக களம் இறங்கினாலும் வீரர்களுக்கு ஏற்ப பந்துவீசி எளிதாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனைத் தொடர்ந்து நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணி எளிதாக 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது ஒரு பக்கமிருக்க இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக செயல்பாடு ஏதுமின்றி இருக்கிறார். அணியில் சேர்க்கப்பட்ட முதல் பதினொரு வீரர்களில் சேர்க்கப்படும் அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தாத வண்ணம் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக விளையாடும் போது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

Kuldeep-1

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறக்கப்பட்டார். இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 57 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் மீண்டும் தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பிவிட்டார் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : குல்தீப் யாதவ் மீண்டும் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பியிருக்கிறார்.

தற்போது குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீச ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து டி20 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதன் மூலம் பந்து வீச்சாளர்களின் வேலைச்சுமை குறையும் அதுமட்டுமின்றி அவருக்கும் வாய்ப்பளித்தால் தான் அவருடைய நம்பிக்கை அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

Advertisement