உலகக்கோப்பை தொடர் முழுவதுமே திரும்ப திரும்ப நடைபெற்ற ஒரே சம்பவம் – கவாஸ்கர் கண்டனம்

Gavaskar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் துவங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற முக்கியமான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் எப்போதுமே இல்லாத வகையில் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் மீது கடுமையான புகார்கள் மற்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் எளிதாக வெற்றி பெற்றுள்ளன.

warner

- Advertisement -

முதல் பேட்டிங் செய்யும்போது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் ஆடுகளங்கள் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது எந்த இலக்கையும் எளிதாக விரட்டும்படி இலகுவாக இருந்தது. இந்த உலக கோப்பை தொடரில் 45 போட்டிகளின் முடிவில் 29 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது.

அதிலும் குறிப்பாக துபாயில் மட்டும் 10 ஆட்டங்களில் ஒன்பது முறை சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளன. அந்த அளவிற்கு துபாய் மைதானம் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருந்தது. துபாய் மைதானத்தில் டாசில் வெற்றி பெற்றாலே போட்டியில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற அளவிற்கு ஆடுகளத்தின் தன்மை இருந்தது. இந்நிலையில் இந்த ஆடுகளங்களில் தன்மை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சரமாரியாக சாடியுள்ளார்.

warner 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த உலக கோப்பை தொடர் முழுவதுமே இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றதுமட்டுமின்றி முக்கியமான இந்த இறுதிப் போட்டியிலும் சேசிங் செய்த அணியே வெற்றி பெற்றது. இது போன்ற பெரிய தொடர்களில் ஆடுகளம் சமநிலையுடன் இருக்க வேண்டியதை ஐசிசி உறுதி செய்திருக்க வேண்டும். ஏனெனில் உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் போராடும்போது ஆடுகளங்களின் நிலைப்பாடு ஒரேமாதிரி இருக்கக்கூடாது.

- Advertisement -

இதையும் படிங்க : வில்லியம்சன் இடத்துல வேறயாரு இருந்தாலும் இதை பண்ணிருப்பாங்களானு தெரியாது – என்ன மனுஷன்யா

ஆடுகளங்களில் தன்மை என்ன? என்பதை ஐசிசி முன்கூட்டியே கவனித்திருக்க வேண்டும். ஆனால் இந்த தொடரில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு அனைத்து ஆடுகளையும் ஒத்துழைத்தது சரியான முடிவு கிடையாது என்று சுனில் கவாஸ்கர் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement