வில்லியம்சன் இடத்துல வேறயாரு இருந்தாலும் இதை பண்ணிருப்பாங்களானு தெரியாது – என்ன மனுஷன்யா

Williamson-3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பல தலை சிறந்த கேப்டன்களை நாம் இதுவரை பார்த்து கடந்து வந்துள்ளோம். அந்த வகையில் தற்போதைய சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டனாக வில்லியம்சன் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பாராட்டைப் பெற்று வருகிறார். ஏனெனில் ஒரு அணித்தலைவராக வெற்றி பெறும்போது முன்நின்று கொண்டாடுவதை போன்று அணி தோல்வி அடையும் போது அதனை சரியாக கையாள வேண்டும். 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை நூலிழையில் தவற விட்ட நியூசிலாந்து அணி கலங்கி நின்றபோது அந்த வேளையில் கூட யார் மீதும் குறை சொல்லாமல் பொறுமையை கையாண்ட வில்லியம்சனின் பக்குவத்தை பலரும் பாராட்டினர்.

Williamson-2

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் அணியை ஊக்கப்படுத்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றிய அவர் இந்த டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்ற குறி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடி இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக போட்டியை இழந்தனர்.

நிச்சயம் இம்முறை டி20 உலகக் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றுவோம் என்று நினைத்த நியூசிலாந்து ரசிகர்களுக்கும் சரி, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சரி இந்த விடயம் பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. ஆனால் இந்த தோல்வியையும் வில்லியம்சன் கையாண்ட விதம் அனைவரது பாராட்டையும் பெற்றது. நேற்று ஆட்டம் முடிந்த பின்பு கூட எந்த இடத்திலும் தனது பொறுமையை, பண்பையும் இழக்காத வில்லியம்சன் தோல்விக்குப் பிறகு மிகவும் பக்குவமாக நடந்து கொண்டார்.

Williamson

அதோடு தற்போது வில்லியம்சன் செய்துள்ள காரியம் இன்னும் அவரை மிகப்பெரிய மரியாதைக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த விடயம் யாதெனில் 14ஆம் தேதி நேற்று டி20 உலககோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற்று. அப்போட்டி முடிந்த வேளையில் அடுத்ததாக நாளை மறுதினம் 17ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 தொடரில் விளையாட அவர் அணியை தலைமை தாங்க உள்ளார். துபாயிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணிக்கு இடையில் ஒரு நாள் மட்டுமே ஓய்வு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : உலகக்கோப்பை முடிந்த கையோடு பிளைட்டை பிடித்து இந்தியா வரவுள்ள நியூசிலாந்து – ரொம்ப பாவம் அவங்க

ஏற்கனவே இந்த உலகக்கோப்பை தோல்வியில் துவண்டு கிடக்கும் வீரர்களை அவர் மீண்டும் உற்சாகமூட்டி வழி நடத்த உள்ளார். வில்லியம்சன் இந்த இடத்தில் வேறு எந்த கேப்டன் இருந்து இருந்தாலும் இந்த தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு நாடு திரும்பி இருப்பார்கள். ஆனால் வில்லியம்சன் அப்படி எல்லாம் யோசிக்காமல் மீண்டும் அணியை வழிநடத்த இந்தியா பயணிக்க உள்ளார். நிச்சயம் இவரது இந்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement