இவ்வளவு பெரிய வீரரை இப்படியா அசிங்கப்படுத்துவீங்க ? பி.சி.சி.ஐ அதிகாரியை விளாசிய – கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான சையது முஷ்டாக் அலியின் நினைவாக நடத்தப்படும் டி-20 தொடரை தரம் தாழ்த்தி பேசிய பிசிசிஐ அதிகாரியை முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். அதன் காரணமாக வரும் 29-ஆம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

vijay

- Advertisement -

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன. ஐபிஎல் தொடரில் எப்படி பல லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. இதனால் இந்த தொற்று வேகமாக பரவும் இதன் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

வெளிநாட்டு வீரர்களும் இந்தியாவிற்கு வரவில்லை. இவ்வாறு பல காரணங்கள் காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி : வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் தொடரை நடத்த இது ஒன்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் கிடையாது.

vijay hazare

உள்நாட்டு வீரர்களை வைத்து ஐபிஎல் நடத்தினால் அது சையது முஷ்டாக் அலி கோப்பை ஆகும். ஆனால் இது ஐபிஎல் தொடர் என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்த முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியதாவது : சையது முஷ்டாக் அலி என்பவர் இந்தியாவின் முன்னாள் வீரர் அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரது பெயரில் உள்ளூர் வீரர்களை வைத்து டி20 தொடர் ஆண்டு வரும் நடைபெறுகிறது.

- Advertisement -

ஐபிஎல் தொடரை பாராட்டி பேசுவதற்காக மற்றொரு தொடரை நீங்கள் இழிவாக பேசக்கூடாது. மேலும் இது ஐ.பி.எல் தொடரை அலட்சியப் படுத்தும் வகையில் தரம் தாழ்ந்து விதமாகவும் அமைந்துள்ளது. இதனை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் நேரடியாக தனது அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளார் கவாஸ்கர்.

gavaskar

உலகஅளவில் புகழ்பெற்ற ஐ.பி.எல் தொடருக்காக இந்தியாவின் பாரம்பரிய தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரை தாழ்த்தி பேசுவது தவறு என்று பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement