ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்த அந்த அணி முனைப்பு காட்டும் – சுனில் கவாஸ்கர் கணிப்பு

Shreyas
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டதால் இந்த ஏலத்தில் எந்த வீரர்கள் எந்தெந்த அணிக்காக இடம் மாறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் :

இந்த மெகா ஏலத்திற்கு முன்னதால் டெல்லி, கொல்கத்தா, லக்னோ போன்ற அணிகள் தங்களது கேப்டனையே வெளியேற்றி உள்ளதால் ரிஷப் அண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் எந்த அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

மேலும் அவர்களது அடிப்படை விலையாக இரண்டு கோடி நிர்ணயிக்கப்பட்ட வேளையில் அவர்களின் மதிப்பு எவ்வளவாக உயரும்? என்பது குறித்து எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் ஷ்ரேயாஸ் ஐயர் எந்த அணியால் வாங்கப்படுவார்? என்பது குறித்து பேசுகையில் கூறியதாவது :

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் டெல்லி அணி நிர்வாகம் ஆர்.டி.எம் கார்டு மூலம் ரிஷப் பண்ட்டை வாங்க முயற்சிக்கலாம். ஆனால் அவர் கிடைக்காத பட்சத்தில் நிச்சயமாக அவர்களது இலக்காக ஷ்ரேயாஸ் ஐயர் தான் இருப்பார். ஏனெனில் ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை சிறப்பாக வழிநடத்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி தற்போது கொல்கத்தா அணியை வழிநடத்திய அவர் அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். எனவே அவரை ஒரு கேப்டன்சி வீரராக வாங்க டெல்லி அணி முயற்சிக்கும். அதேபோன்று கொல்கத்தா அணியும் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தி ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் எடுக்க முயற்சிக்கலாம்.

இதையும் படிங்க : அதை செய்யாத கம்பீர் மேல எல்லா பழியையும் போடாதீங்க.. ஆஸியில் சோதனை காத்திருக்கு.. ஹர்பஜன் பேட்டி

ஆனால் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதில் விருப்பம் இல்லாத பட்சத்தில் கொல்கத்தா அணி அவரை அணியிலிருந்து விடுவிக்கவே முயலும் குறிப்பிடத்தக்கது. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக ஐ.பி.எல் கோப்பையை வென்றிருந்தாலும் அவரை இந்திய அணி தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement