தோனி அடுத்த வருஷமும் சி.எஸ்.கே அணிக்காக ஆடுவாரு. ஏன் தெரியுமா? – விளக்கம் கொடுத்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் ஓய்வு பெறுவது குறித்து அதிக பேச்சுகள் நிலவி வந்த வேளையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கேப்டனாக நான்காவது முறை சென்னை அணிக்கு கோப்பை வென்று கொடுத்த தோனி இந்த ஆண்டு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும் ஜடேஜாவால் கேப்டன்சி அழுத்தத்தை தாங்க முடியவில்லை என்கிற காரணத்தினால் மீண்டும் தற்போது கேப்டனாக விளையாடி வருகிறார்.

Dhoni-3

- Advertisement -

ஆனால் தற்போது 40 வயதை தொட்டுள்ள தோனி இன்னும் எத்தனை நாட்கள் தொடர்ந்து விளையாடுவார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவர் இன்னும் ஒரு சில சீசன்களில் கேப்டனாக சென்னை அணியை பலப்படுத்தி விட்டே ஓய்வினை அறிவிக்கவேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை அணியில் ஏகப்பட்ட குறைகள் இருப்பதனால் அதை எல்லாம் நிவர்த்தி செய்துவிட்டு அணியை பலப்படுத்திய பிறகே அணியை விட்டு செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இதுவரை தோனி அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நிச்சயம் அடுத்த ஆண்டும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

dhoni 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி விளையாடி வரும் விதத்தைப் பார்க்கையில் அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதோடு போட்டியை நல்ல மகிழ்ச்சியுடன் முழு எனர்ஜியுடன் விளையாடி வருகிறார். அவர் இன்றளவிலும் ரன்னிங் ஓடுவதிலும் சரி, பேட்டிங்கில் அதிரடியாக விளையாடுவதிலும் சரி மிகச்சிறப்பாக சுறுசுறுப்பாக இருக்கிறார்.

- Advertisement -

அதனால் தோனி இப்போது ஓய்வு பெற மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் கடந்த 2020-ஆம் ஆண்டு தோனியிடம் ஓய்வு பற்றி கேட்கப்பட்ட போது “நிச்சயமாக இல்லை” என்று கூறிய பின்னர் நான்காவது பட்டத்தை சென்னை அணிக்கு வாங்கிக் கொடுத்தார். அதே போன்று இந்த ஆண்டும் சென்னை அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அடுத்த 2023ஆம் ஆண்டிலும் விளையாடி கோப்பையை கைப்பற்றுவார் என்று தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவரே முன்வந்து என்கிட்ட ஓகே சொன்னாரு. பொல்லார்டு நீக்கம் குறித்த தகவலை பேசிய – ரோஹித் சர்மா

அவர் கூறியது போலவே தற்போது நிலையற்று இருக்கும் சிஎஸ்கே அணியை பலப்படுத்தி விட்டு ஒரு கோப்பையுடன் சென்னை மைதானத்தில் விளையாடிய பின்னரே தோனி விடை பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement