IPL 2023 : இவரோட கேப்டன்சி தோனி போலவே இருக்கு. அவங்க டீமோட ஸ்ட்ரென்த்தே அவர்தான் – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கிய 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ஏப்ரல் மாதத்தின் இறுதியை எட்டியுள்ளது. இதுவரை 38 லீக் போட்டிகள் முடிவடைந்த வேளையில் அனைத்து அணிகளும் புள்ளி பட்டியலில் முன்னேற்றத்தை காண்பதற்காக போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு சாம்பியனாக இந்த தொடரை ஆரம்பித்த குஜராத் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

GT

- Advertisement -

அதோடு அந்த அணியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் இந்த தொடரிலும் அவர்களது வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

வழக்கமாகவே ஆதிக்கம் செலுத்தும் ஜாம்பவான் அணிகளை காட்டிலும் இளம் வீரர்களை கொண்ட ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான இந்த குஜராத் அணி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் குஜராத் அணியின் பெரிய பலமே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி தான் என பாண்டியாவை சுனில் கவாஸ்கர் புகழ்ந்து பேசி உள்ளார்.

GT vs MI

இது குறித்து அவர் கூறுகையில் : சில சமயங்களில் கேப்டன்கள் தங்களது ஆளுமை மற்றும் குணாதிசயங்களை அணியில் உள்ள வீரர்களுக்கும் உட்செலுத்துவார்கள். ஆனால் ஹர்திக் பாண்டியா அப்படி ஒரு கேப்டன் கிடையாது. அவர் ஆளுமையை கடத்த வில்லை. அவர் அவராகவே இருக்கிறார்.

- Advertisement -

எனவே அவரால் அவரது முழு பங்களிப்பையும் அளித்து அணியை சிறப்பாக வழி நடத்த முடிகிறது. மூன்று வகையிலுமே அவரால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடிவதால் குஜராத் அணி வெற்றிகரமாக விளையாடி வருகிறது. அவருடைய கேப்டன்சியின் பலமாகவும் அதுவாகத்தான் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அந்த மேட்ச்ல விராட் கோலி கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்துலையும் இந்திய கொடி பறந்திருக்கும் – சாஸ்திரி ஆதங்க பேட்டி

சில கட்டங்களில் பாண்டியா தோனியை போன்றே சிறந்த கேப்டனாக இருக்கிறார். ஏனெனில் அவரது அணுகுமுறையும் தோனியின் அணுகுமுறையும் ஒரே போன்று இருக்கின்றது. தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை ஹார்டிக் பாண்டியா கற்று இருக்கிறார் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement