கோலி ஒரு கம்ப்யூட்டர். அவர் இந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டார் – கவாஸ்கர் புகழாரம்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளில் இழந்து 273 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் 108 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி தற்போது 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து தொலைக்காட்சி வர்ணனையில் நேரலையில் பேசிக் கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் கோலியின் சிறப்பான ஆட்டத்தை புகழ்ந்து தள்ளினார். கவாஸ்கர் கூறுகையில் : கோலியின் பேட்டிங் மிகவும் சிறப்பான ஒன்றாகும். அவர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ஸ்டைலே தனிதான். அதை திரும்பத் திரும்ப பார்க்கலாம். இரண்டு வீரர்களுக்கு நடுவே பந்தை கச்சிதமாக பவுண்டரிக்கு அனுப்புவதில் கோலி கில்லாடி.

இதைவிட சிறப்பாக பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் வீரரை சர்வதேச அளவில் பார்க்கக்கூட முடியாது. பீல்டர்கள் எங்கு நிற்கிறார்கள் அவர்கள் கைக்கு பந்து செல்லுமா என்பதை முன்கூட்டியே முடிவு செய்து கனகச்சிதமாக பீல்டர்களுக்கு இடையிலே அடிப்பார். அவரது மூளை கம்ப்யூட்டர் போன்றது அவருக்குத் தெளிவாக எங்கு ஆட வேண்டும் என்று தெரிந்து ஆடுகிறார். ஒருபோதும் அவர் பீல்டர் கைக்கு நேராக பந்தை அடிக்கும் தவறை மட்டும் செய்ய மாட்டார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement