கவாஸ்கரின் பேச்சை கேளுங்க அப்போதோ இந்தியாவுல கிரிக்கெட் நடக்கும் – குவியும் ஆதரவு

Sunil-gavaskar
- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு அரசு தங்களது நாட்டிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதேபோல்தான் ஆஸ்திரேலியாவிலும் செப்டம்பர் 30ம் தேதி வரை தங்கள் நாட்டில் வெளிநாட்டினர் நுழைய கடுமையான தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவில் தான் அக்டோபர் 18ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது.

Cup

- Advertisement -

இந்நிலையில் தற்போதைய சூழலில் இந்த டி20 உலக கோப்பை தொடர் நடப்பது மிக கடினம் என்று தெரிகிறது. அதனால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு வீரர்களும் பல்வேறு யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரரும்,வர்ணனையாளருமான கவாஸ்கர் டி20 உலகக்கோப்பை குறித்த தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் : ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு சிக்கல் உண்டாகியுள்ளது.இதே நேரத்தில் இந்தியாவில் 2021ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது.

Ipl cup

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டால் இரண்டு கிரிக்கெட் தொடர்களையும் பரிமாறிக் கொள்ளலாம் . அதாவது இந்த ஆண்டில் இந்தியாவில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்தி விட்டு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க வேண்டிய உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடத்தலாம்.

- Advertisement -

Cup

மேலும் இந்த முயற்சி வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியாவில் ஐபிஎல் தொடரையும் நடத்தலாம். அது உலக கோப்பை தொடருக்கு மிகச்சிறந்த முன்னோட்டமாக இருக்கும். இது வீரர்களுக்கு பயிற்சியாகவும் அமையும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர். கவாஸ்கரின் இந்த யோசனை சிறப்பான யோசனை என்றும் அவர் கூறும்படி செய்தால் அனைத்து தொடரும் நடக்க வாய்ப்பிருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Ganguly

கவாஸ்கரின் இந்த பேட்டியை பார்த்த இந்திய ரசிகர்கள் கட்டாயம் இந்த யோசனையை பி.சி.சி.ஐ ஏற்கவேண்டும். இந்த யோசனையின் மூலம் ஐ.பி.எல் போட்டியையும் நடத்தமுடியும். டி20 உலகக்கோப்பையும் நடத்தமுடியும் என்று கவாஸ்கரின் இந்த யோசனைக்கு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்கள் தங்களது ஆதரவினை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement