நேரலையில் இந்திய வீரர்களை புகழ்ந்து அவமானப்பட்ட கவாஸ்கர். இதெல்லாம் தேவையா? – நடந்தது என்ன?

Gavaskar
Advertisement

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்வதில் மிக நீண்டகால அனுபவம் வாய்ந்தவர். அவரது வர்ணனைகள் மற்றும் கணிப்புகள் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அவரது வர்ணனையில் ஏற்பட்ட சில சொதப்பல் காரணமாக அவர் சக வர்ணனையாளர்கள் மத்தியில் அவமானத்தை சந்தித்துள்ளார்.

Gavaskar

அதன்படி இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நல்ல நிலையுடன் மூன்றாவது நாள் போட்டியை துவங்கியது. போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டி துவங்கிய சில நிமிடங்களிலேயே ராகுல் மற்றும் ரஹானே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுடன் தமிழக வீரர் அஷ்வின் இணைந்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 5 சதங்களை அடித்து இருக்கிறார். எனவே இன்றைய போட்டியிலும் அசத்துவார் என்று எப்போதும் இல்லாத வகையில் இந்த போட்டியில் அஷ்வினை கவாஸ்கர் புகழ்ந்து தள்ளினார். ஆனால் அவர் அப்படிப் பேசிய அடுத்த சில நொடிகளிலேயே 4 ரன்களில் அஷ்வின் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Gavaskar

பின்னர் ஷர்துல் தாகூர் களம் இறங்கும் போதும் இவரும் 3 டெஸ்ட் அரை சதங்களை அடித்துள்ளார் இவர் பார்த்துக் கொள்வார் என்பது போல கவஸ்கர் பேசிக்கொண்டிருக்கையில் அவரும் அடுத்து சில நொடிகளிலேயே 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்படி கவாஸ்கர் ஒவ்வொருத்தராக புகழ புகழ அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே கவாஸ்கர் அருகிலிருந்த வர்ணனையாளர்கள் மத்தியில் தர்ம சங்கடத்தை சந்தித்தார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சம்பவத்துடன் 200 விக்கெட்டுகளை தொட்டு வரலாறு படைத்த – ஷமி

மேலும் நீங்கள் புகழ்வதால் தான் அவர்கள் ஆட்டமிழக்கின்றனர் இது வர்ணனையாளர்கள் சாபம் என சக வர்ணனையாளர்கள் கவாஸ்கரை நேரடியாகவும் கிண்டல் செய்தனர். இந்த சம்பவத்தால் கவஸ்கர் நேரலையில் மற்றவர்கள் மத்தியில் சங்கடத்தை சந்தித்தார். எப்பேர்ப்பட்ட நபராக இருந்தாலும் இதுபோன்ற சறுக்கல்கள் என்பது சகஜம் தான்.

Advertisement